76 வயது முதியவர் பலி.. கொரோனாவால் இந்தியாவில் முதல் மரணம்
கர்நாடாகாவை சேர்ந்த 76 வயதுடைய முதியவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
புதுடெல்லி / பெங்களூரு: கொரோனா வைரஸ் (Coronavirus) நோய்த்தொற்றின் முதல் மரணம் (First death in India) இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கர்நாடகாவின் (Karnataka) கலாபூர்கியில் 76 வயது நபர் வியாழக்கிழமை இறந்தார். இதை கர்நாடக அரசின் சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட 74 வழக்குகள் உள்ளன.
நமக்கு கிடைத்த தகவல்களின்படி, "அவர் பிப்ரவரி 29 அன்று சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து திரும்பினார். அவருக்கு கொரோனா (COVID-19) அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவர் மார்ச் 10 அன்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்கள் அவரை ஹைதராபாத்தில் இருந்து சிறந்த சிகிச்சைக்காக கல்புர்கிக்கு அழைத்து வந்தார்கள். இதற்கிடையில் அவர் வழியில் இறந்தார்.
கர்நாடக சுகாதார அமைச்சர் பி.ஆர். பி ஸ்ரீராமுலு, ஒரு ட்வீட்டில் இது குறித்து தகவல் அளித்தபோது, "கல்பூர்கியில் (Kalburgi) இறந்த 76 வயதான நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நெறிமுறையின்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.