புதுடெல்லி: 5 மாநில தேர்தலுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு, அரசு பெரிய தொகையை வழங்கியுள்ளது. இப்போது மத்திய ஊழியர்களின் மற்றொரு அலவன்ஸ் அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியிஅ அரசு எடுத்த இந்த முடிவிற்கு பின், ஊழியர்களின் சம்பளம், 8000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. உங்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.


ஊழியர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு
பாதுகாப்புத் துறையின் சிவில் ஊழியர்களின் ரிஸ்க் அலவன்ஸை (Risk Allowance) அதிகரிக்க மத்திய மோடி அரசு முடிவு செய்துள்ளது.


மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான தகவல் அறிவிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வு பற்றிய முக்கிய செய்தி, இந்த நாளில் அறிவிப்பு வெளியாகுமா? 


8000 வரை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது
உண்மையில், பாதுகாப்புத் துறையில் உள்ள பல வகை சிவில் ஊழியர்களுக்கும் இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக சில கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. பதவிக்கு ஏற்ப இந்த கொடுப்பனவின் தொகையும் மாறுபடும். 


இந்த சிறப்பு கொடுப்பனவை ஆண்டு அடிப்படையில் கணக்கிட்டால், ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 1000 ரூபாயில் இருந்து 8000 ரூபாய் வரை அதிகரிக்கும்.


யாருக்கு எவ்வளவு கொடுப்பனவு கிடைக்கும்?
இந்த பிரிவில் வரும் ஊழியர்களின் கொடுப்பனவின் கீழ், முறைப்படுத்தப்படாத பணியாளர்களுக்கு மாதம் ரூ.90 அபாய கொடுப்பனவு வழங்கப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission ஊழியர்களுக்கு ஹோலி பரிசு: ஊதியத்தில் பம்பர் உயர்வு


சில வகை பணியாளர்களுக்கு மாதம் ரூ.135, சில குறிப்பிட்ட வகை பணியாளர்களுக்கு மாதம் ரூ.180, கெஜட்டட் அல்லாத அதிகாரிகளுக்கு மாதத்திற்கு ரூ.408, கெசட்டட் அதிகாரிகளுக்கு மாதத்திற்கு ரூ.675  கொடுப்பனவு கொடுக்கப்படும்.


மேலே குறிப்பிட்ட தொகைகள் மாதந்தோறும் கொடுக்கப்படும் சம்பளத்தில் சேர்த்து வழங்கப்படும். 


இதைத்தவிர, 7வது ஊதியக் குழு-வின் பரிந்துரையின்படி, மார்ச் 16ம் தேதி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தால், அது அரசு ஊழியர்களுக்கு, மோடி அரசு வழங்கும் ஹோலிப் பரிசாக அமையும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ அரியர் குறித்த முக்கிய அப்டேட், அரியர் கிடைக்குமா கிடைக்காதா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR