7th Pay Commission: OPS, NPS ஓய்வீதியத் திட்டத்தில் அரசு அளித்த மிகப்பெரிய நிவாரணம்
2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைமை (OPS) வழங்கப்படும் என நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது, ஆனால் அவர்களின் தேர்வு 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பு நடந்திருக்க வேண்டும்.
7th Pay Commission latest news: 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைமை (OPS) வழங்கப்படும் என நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது, ஆனால் அவர்களின் தேர்வு 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பு நடந்திருக்க வேண்டும். நியமனத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், காவல் துறை சரிபார்ப்பு மற்றும் பிற சம்பிரதாயங்கள் காரணமாக நியமனம் தாமதமானால் அதற்கு அந்த நபர் பொறுப்பேற்க முடியாது என்பது அரசாங்கத்தின் கருத்தாக உள்ளது.
ஆகையால், ஜனவரி 1, 2004 க்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைமை (OPS) அல்லது புதிய ஓய்வூதிய முறை (NPS) ஆகிய இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஒரு முறை வழங்கப்படும். எனினும் இந்த தேர்வை செய்ய தகுதி பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் 2021 மே 31 க்குள் இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
அரசாங்க உத்தரவின்படி, ஜனவரி 1, 2004 க்கு முன்னர் ஒரு மத்திய அரசு ஊழியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் 2004 ஜனவரி 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு அவரது நியமனம் நிகழ்ந்தால், அவர்களுக்கு இந்த இரு ஓய்வூதிய திட்டங்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்வதற்கான வசதி வழங்கப்பட வேண்டும் என அரசு கருதுகிறது. இதற்கு தகுதி பெறும் மத்திய அரசு ஊழியர்கள் இது தொடர்பாக ஓய்வூதியத் துறைக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். NPS திட்டத்தைப் பெற விரும்பும் ஊழியர்கள், அவர்கள் ஏற்கனவே அதைத்தான் பெற்றுக்கொண்டிருப்பதால், எந்த விண்ணப்பத்தையும் அனுப்ப வேண்டாம். NPS-க்கு பதிலாக OPS முறையில் ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்கள் மட்டும் இதற்கான விண்ணப்பிக்க வேண்டும்.
ALSO READ: 7th Pay Commission : மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி! ரூ .10,000 முன்பணம் பெறலாம்!
OPS vs NPS
ஏ.ஜி பிரதர்ஹுட்டின் முன்னாள் தலைவர் ஹரிஷங்கர் திவாரி, “புதிய ஓய்வூதிய முறையை (NPS) விட பழைய ஓய்வூதிய முறை (OPS) மிகவும் பயனளிக்கிறது, ஏனெனில் OPS ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உள்ளடக்கியது." என்று கூறினார். NPS-ஐக் காட்டிலும் OPS மிகவும் பாதுகாப்பான ஓய்வுபெற்ற வாழ்க்கையை வழங்குகிறது என்று கூறிய அவர், இதற்கு தகுதி பெறும் மத்திய அரசு ஊழியர்கள் உடனடியாக NPS-லிருந்து OPS-க்கு மாறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
OPS இல், மத்திய அரசு ஊழியர் (Central Goverment Employees) கடைசியாக வாங்கிய ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது என்று திவாரி மேலும் கூறினார். OPS இல், பணவீக்க அதிகரிப்புடன் ஒருவரின் அகவிலைப்படியும் தானாகவே அதிகரிக்கும். மேலும் ஊதியக்குழு பரிந்துரைகளையடுத்து ஊழியரின் ஓய்வூதியம் தானாகவே அதிகரிக்கும்.
மத்திய அரசு 2004 ஜனவரி 1 முதல் NPS-ஐ நடைமுறைப்படுத்தியது. ஆனால் இதனால் ஊழியர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அப்போதிருந்து OPS முறையை மீண்டும் கொண்டு வர கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
ALSO READ: 7th Pay Commission: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை, இது குறித்து அரசு கூறியது என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR