7th pay commission Latest Update: கொரோனா காலத்தில் மக்களது பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம், பொதுமக்கள் என அனைவரது நிதி நிலைமையும் மோசமடைந்துள்ளது.
பொதுவாகவே, பண்டிகை காலத்தில், மக்களது செலவுகள் அதிகரிப்பது வழக்கம். அத்தகைய சூழ்நிலையில், அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க, சிறப்பு பண்டிகை முன்பண திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்பும் அரசு ஊழியர்களுக்கு முன்பண வசதி கிடைத்தது
முன்னரும், ஆறாவது ஊதியக்குழுவின் கீழ், சிறப்பு பண்டிகை முன்பண திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் முன்கூட்டியே முன்பணம் அளித்து உதவியது.
முன்னதாக, இந்த திட்டத்தின் கீழ் 4,500 ரூபாய் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு (Modi Government) இந்த தொகையை ரூ .10,000 ஆக உயர்த்தியுள்ளது.
இந்த தொகைக்கு மத்திய அரசு ஊழியர்களிடமிருந்து எந்த வித வட்டியும் வசூலிக்கப்படுவதில்லை. இந்தத் திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், மார்ச் 31 அதற்கான கடைசி தேதி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
ஊழியர்கள் இந்தத் தொகையை பத்து தவணைகளில் திருப்பித் தரலாம். அதாவது இதை திருப்பித் தர மாதத் தவணையாக ரூ .1,000 திருப்பிச் செலுத்தினால் போதும்.
ALSO READ: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட், 32% DA hike கிடைக்கும்: நிபுணர்கள்
முன்பணத்தை பெறுவது எப்படி
சிறப்பு பண்டிகைக் கால முன்பண திட்டம் குறித்த தகவல்களை அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த தொகை முன்கூட்டியே ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
ஊழியர்கள் இந்த தொகையை ஏடிஎம்மில் இருந்து எடுத்து தங்களுக்கு தேவையான வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மத்திய அரசின் (Central Government) இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது, ஏனெனில் ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் ஏற்கனவே தடை செய்துள்ளது.
அகவிலைப்படி ஜூலை மாதம் அளிக்கப்படும்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2021 ஜூலை மாதம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
கொரோனா காலத்தில் அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை, அதாவது DA-வை தடைசெய்தது நினைவிருக்கலாம்.
இருப்பினும், ஜூலை மாதத்தில் ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் கிடைக்கக்கூடும். ஏனென்றால் அரசாங்கம் ஜூலை மாதத்தில் அகவிலைப்படியின் (DA) மூன்று தவணைகளை ஒன்றாக அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எவ்வாறு கணக்கிடப்படும்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR