7th Pay Commission: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை, இது குறித்து அரசு கூறியது என்ன?

வாரத்தில் 4 நாட்கள் அல்லது வாரத்தில் 40 மணிநேரம் வரை பணிபுரிவதற்கான எந்தவொரு திட்டமும் தற்போது மத்திய அரசு அதிகாரிகளுக்கு பரிசீலிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட செயல்முறையை அறிமுகப்படுத்த திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2021, 11:49 AM IST
  • வாரத்திற்கு 4 வேலை நாட்களுக்கான செயல்முறையை அரசாங்கம் அமல்படுத்தும் என்று ஊழியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • எனினும், மத்திய அரசு ஊழியர்களின் நம்பிக்கை வீண் போனது.
  • இது குறித்து மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது.
7th Pay Commission: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை, இது குறித்து அரசு கூறியது என்ன? title=

7th pay commission news: வாரத்திற்கு 4 வேலை நாட்களுக்கான செயல்முறையை அரசாங்கம் அமல்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்த மத்திய அரசு ஊழியர்களின் நம்பிக்கை வீண் போனது. அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது.

மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார், அரசாங்கத்தின் திட்டங்களில் இதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என்று நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வ தகவல்களை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்ட தகவல்களில், வாரத்தில் 4 நாட்கள் அல்லது வாரத்தில் 40 மணிநேரம் வரை பணிபுரிவதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை என்று கங்வார் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் பொருள் மத்திய அரசு ஊழியர்கள் முன்பு போலவே தொடர்ந்து பணியாற்றுவர், அவர்களது பணி நேரத்திலோ, பணி நாட்களிலோ எந்த மாற்றமும் செய்யப்படாது. அவர்களது பணிபுரியும் கால அளவிலோ அல்லது வார விடுமுறை நாட்களிலோ எதுவும் மாறப்போவதில்லை. 

ALSO READ: 7th Pay Commission : மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி! ரூ .10,000 முன்பணம் பெறலாம்!

தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "வாரத்தில் 4 நாட்கள் அல்லது வாரத்தில் 40 மணிநேரம் வரை பணிபுரிவதற்கான எந்தவொரு திட்டமும் தற்போது மத்திய அரசு அதிகாரிகளுக்கு பரிசீலிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட செயல்முறையை அறிமுகப்படுத்த திட்டம் எதுவும் இல்லை" என்று தெரிவித்தார். 

அமைச்சர் கூறுகையில், "இந்திய மத்திய அரசின் நிர்வாக அலுவலகங்களில் வேலை நாட்கள் / விடுமுறை / வேலை நேரம் ஆகியவை அந்தந்த மத்திய ஊதியக்குழுக்களால் பரிந்துரைக்கப்படுகிறது. நான்காவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், வாரத்தில் ஐந்து பணி நாட்கள் மற்றும் ஒரு நாளைக்கு எட்டரை மணி நேரம் வேலை என்ற செயல்முறை இந்திய அரசின் சிவில் நிர்வாக அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.” என்றார்.

ALSO READ: 7th Pay Commission: இந்த ஊழியர்களின் பதவி உயர்வு பற்றி தெளிவுபடுத்தியது மத்திய அரசு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News