ராகுல் காந்தி, மன்மோகன் சிங் குறித்து மோசமாக எழுதியதற்காக பராக் ஒபாமாவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பற்றி முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது ‘The Promised Land’ என்ற புத்தகத்தில் ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங் தொடர்பாக எழுதியது பற்றி பெரிதும் பேசப்பட்டது. அதில் அவர் ராகுல் காந்தி பக்குவம் இல்லாதவர் என எழுதியிருந்தார். 


மேலும், முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் (Manmohan Singh) குறித்து குறிப்பிடுகையில், அவர் ராகுல் காந்தியின் ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்பதால் தான் அவர் பிரதமராக ஆக்கப்பட்டார் என புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதையடுத்து உத்தரபிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் ஒரு வழக்கறிஞர் வியாழக்கிழமை அவருக்கு எதிராக சிவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


சிவில் வழக்கில், வக்கீல் ஒபாமாவிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என கோரியுள்ளார், ஏனெனில் அவரது புத்தகம் காங்கிரஸ் தலைவர்களை "அவமதிக்கிறது" என்றும் அவர்களைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது எனவும் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | ராகுல் காந்தி ஒரு பக்குவப்படாத தலைவர்: Barack Obama


அகில இந்திய கிராமிய பார் அசோசியேஷனின் தேசியத் தலைவர் கியான் பிரகாஷ் சுக்லா, சிவில் வழக்கை லால்கஞ்ச் சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு டிசம்பர் 1 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் வகையில் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்றும் இது நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் என்றும் சிவில் வழக்கில் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்த தலைவர்களுக்கு லட்சக் கணக்கான ஆதரவாளர்கள் இருப்பதாகவும், பராக் ஒபாமாவின் (Barack Obama) புத்தகத்தில் கூறப்பட்ட கருத்துக்களால் அவர்கள் வேதனை அடைவதாகவும் சிவில் வழக்கில் அவர் மேலும் கூறினார். "காங்கிரஸ் தலைவர்களின் பின்பற்றுபவர்கள் இந்த புத்தகத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கினால், அது குழப்பத்திற்கு வழிவகுக்கும்," என்று அவர் கூறினார்.


ஒபாமாவிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாவிட்டால், அவர் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே உண்ணா விரத போராட்டம் நடக்கும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.


மேலும் படிக்க | ராமாயணம், மகாபாரதத்துடன் என் குழந்தைப் பருவம் கழிந்தது: Barack Obama


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR