முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையான 'எ பிராமிஸ்ட் லாண்ட்' என்ற புத்தகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் தனது புத்தகத்தில், காங்கிரஸ் தலைவரை ஒரு தகுதியற்ற, பதற்றமான, பக்குவப்படாத தலைவர் என விவரித்துள்ளார்.
இது பாஜக (BJP) தலைவர்களுக்கு ராகுல் காந்தியை சீண்ட ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்வித் பாத்ரா, பதற்றமாக, எதைப் பற்றியும் முழுமையாக தெரியாத நபர் யாரென்று கூறுங்கள் என கிண்டலுடன் கேள்வியை எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி குறித்து பராக் ஒபாமா (Barack Obama) கூறிய கருத்துக்கள் குறித்து, மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி வெள்ளிக்கிழமை கூறியதாவது, ஒருவரின் முட்டாள்தனம் பற்றிய விவாதம் சர்வதேச அளவிற்கு சென்றுள்ளது என்பது ராகுல் காந்தியை பற்றி உலகமே அறிந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது என்றார்
ALSO READ | வட கொரியாவின் விந்தை அதிபர் கிம் ஜாங் உன்னை மீண்டும் காணவில்லை... !!!
பராக் ஒபாமா தனது புத்தகத்தில் ராகுல் பற்றி எழுதியதில், 'ராகுல் காந்தி ஒரு மாணவர், அவர் ஆசிரியரைக் கவர வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார், ஆனால் ஒரு விஷயத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்றோ அல்லது விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லை.' ராகுல் காந்தி (Rahul Gandhi) 'பதற்றமான மனிதராகவும், தகுதியில்லாத நபர்' என்றும் முன்னாள் அதிபர் பராக ஒபாமா வர்ணித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் பாப் கேட்ஸ் மற்றும் மன்மோகன் சிங்கிடம் ஒரு ஒற்றுமையை காண்பதாகவும், இருவரும் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது, 2010,2015 ஆகிய ஆண்டுகளில் இரு முறை இந்தியா வருக்கை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என பாகிஸ்தானை சாடிய பிரிட்டன்...!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR