இளம்பெண்ணுடன் மது பாட்டிலோடு நைட் கிளப்பில் அமர்ந்திருந்த ‘ராகுல்காந்தி.!’
இரவு நேர நைட் கிளப் ஒன்றில் ராகுல்காந்தி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியை யார் தலைமை வகிப்பது என்ற சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் கட்சிக்கு கசப்பையே அளித்தன. இதனால் கட்சியை அடுத்தக்கட்ட தளத்துக்கு நகர்த்த வேண்டும் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுக்கவும் அகில இந்திய காங்கிரஸ் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடக்கமாக, காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரைச் சேர்ப்பதற்கான முயற்சி நடைபெற்றது. இதற்கான அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.
மேலும் படிக்க | அரசியல் கட்சி தொடங்கும் பிரசாந்த் கிஷோர்?
ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்சிக்குள் இருக்கும் பூசல்களையும், காங்கிரஸ் கட்சியில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்தும் பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாகவே ட்விட்டரில் விளக்கியிருந்தார். ஆனால், 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தற்போதிருந்தே பாஜக தயாராகி வருகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற நிலையை உருவாக்க பாஜக வெளிப்படையாகவே அறிவித்து வரும் நிலையில், பாஜகவின் ஐடி விங் பிரிவு தலைவர் அமித் மால்வியா ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டார்.
அதில், நைட் கிளப் பார்ட்டில் ராகுல்காந்தி அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. மேலும், சுற்றியிருப்பவர்கள் மது அருந்திக்கொண்டிருக்கும்போது ராகுல்காந்தி செல்போன் பார்த்தபடி இருப்பதும், மற்றொரு புகைப்படத்தில் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது போன்றும் உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியா, அதன் கீழே இப்படி எழுதியது தற்போது சர்ச்சையாகியுள்ளது, ‘காங்கிரஸ் கட்சி, தலைமை இல்லாமல் வெடிக்கும் நிலையில் இருக்கும்போது ராகுல்காந்தி நைட் கிளப்பில் இருக்கிறார்’.!
இந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க | தடுப்பூசி போட வேண்டும் என எவரையும் கட்டாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்
தனது ஊடக நண்பரான சும்னிமா உதாஸின் திருமணத்துக்காக திங்கட்கிழமை நேபாளத்துக்கு சென்றார் ராகுல்காந்தி. நேபாள தலைநகர் காத்மாண்டு சென்ற ராகுல்காந்தி, பகவதிஸ்தானில் உள்ள பிரபல தனியார் நைட் க்ளப்புக்குச் சென்றுள்ளார். அங்குதான் இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘ராகுல் காந்தி தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இந்தியாவில் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. திருமணத்தில் கலந்துகொள்வது என்பது சட்டவிரோதம் என்று வருங்காலத்தில் பாஜக அறிவிக்கக்கூடும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | மசூதிகளில் 54 ஆயிரம் ஒலிபெருக்கிகள் அகற்றம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR