மசூதிகளில் 54 ஆயிரம் ஒலிபெருக்கிகள் அகற்றம்!

மும்பையில் உள்ள 72% மசூதிகளில் காலை தொழுகைக்கு ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டன என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 1, 2022, 10:38 PM IST
  • இதுவரை 53,942 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.
  • வழிபாட்டு தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றப்பட்டன.
மசூதிகளில் 54 ஆயிரம் ஒலிபெருக்கிகள் அகற்றம்!  title=

முன்னதாக மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை மே 3ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, தற்போது மும்பையில் உள்ள 72% மசூதிகளில் காலை தொழுகை அல்லது பிரார்த்தனைக்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக போலீஸ் வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்தன.

மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்ற எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரேயின் கோரிக்கை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Mosque

பொதுவாக காலை 5 மணிக்கு முதல் தொழுகைக்கான அழைப்பு ஒலிபெருக்கிகளில் ஒலிக்கப்படுகின்றன. 72% மசூதிகள் காலை தொழுகைக்காக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டாலும், இன்னும் பல மசூதிகள் ஒலிபெருக்கிகளின் அளவைக் குறைத்துள்ளன என்று ஒரு மும்பை காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கிகள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்ததையடுத்து, நகரின் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட மதத் தலைவர்களின் கூட்டத்தை காவல்துறை சமீபத்தில் நடத்தியது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | மே தினம் விடுமுறை - 200 கோடி ரூபாய் வசூல் செய்த டாஸ்மாக்

Mosque

மேலும், ஒலி மாசுபாட்டைத் தவிர்க்க, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெறவும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் காவல்துறை சார்பில் மதத் தலைவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டாத தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து ஒலிபெருக்கிகளை உரிய அனுமதிகள் பெறாமல் சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உத்தர பிரதேசத்தில் வழிபாட்டு தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணிகள் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி வைக்கப் பட்டிருந்த 53,942 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு உள்ளன என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

Mosque

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "வழிபாட்டு தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 53,942 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. வரும் நாட்களிலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | டாஸ்மாக் தருவது மதுவா? விஷமா? மதுப்பிரியர்களை சுரண்டும் தமிழக அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News