புதுடெல்லி: எய்ம்ஸ் செவிலியர் சங்கம் (AIIMS Nurses Union) இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. 6 வது மத்திய ஊதியக்குழு (Sixth Central Pay Commission) பரிந்துரைகள் உட்பட தங்களுடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நர்சிங் அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு பணியில் பாலின அடிப்படையிலான இடஒதுக்கீட்டை (Reservation) ஒழித்தல், மருத்துவமனை விடுதிகளை மேம்படுத்துதல் மற்றும் கேடர் மறுசீரமைப்பு மறுஆய்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரும் செவிலியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றனர்.

 

பணியிடத்தில் நிலவும் நிலைமைகள் தொடர்பாக ஜூன் மாதத்தில் தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் தில்லி (All India Institute of Medical Sciences Delhi, AIIMS Delhi).


இந்த மருத்துவமனையின் COVID-19 பகுதிகளில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் ஒரே மாதிரியான நான்கு மணி நேர மாற்றத்தை செயல்படுத்துதல், COVID-19 சிகிச்சைப் பிரிவு மற்றும் COVID அல்லாத சிகிச்சைப் பிரிவு இவற்றுக்கு இடையே ஒரு சீரான சுழற்சி கொள்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை செவிலியர்கள் முன்வைத்ததுள்ளனர். 

 

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுக்கு (AIIMS Director Dr Randeep Guleria) அனுப்பிய புதிய அஞ்சலில், செவிலியர் சங்கம், கோவிட் -19 சுகாதார ஊழியர்களின் அவல நிலையை வெளிப்படுத்தும் விஷயங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது. 

 


 

பணிக்குழு கூட்டங்களில் கடிதங்கள் மற்றும் வழக்கமான பிரதிநிதித்துவங்களுக்கு எந்தவிதமான கவனமும் செலுத்தப்படவில்லை என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தினால், எய்ம்ஸ் மருத்துவமனை நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று அஞ்சப்படுகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR