அரசியல் லாபத்திற்காக போலி என்கவுன்டர்களை நடத்துகிறது பாஜக! ஓவைசி பகீர் குற்றச்சாட்டு
Asaduddin Owaisi Accusing BJP: மத்திய அரசை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, அரசியல் லாபத்திற்காக போலி என்கவுன்டர்களை நடத்துகிறது பாஜக என்று பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வைக்கிறார்
ஹைதராபாத்: மத்திய அரசை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, முஸ்லிம்களை குறிவைத்து செயல்படும் பாஜக, தான் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசியல் லாபத்திற்காக போலி என்கவுன்டர்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
மதத்தின் பெயரால் என்கவுண்டர்
மதத்தின் பெயரால் பாஜக என்கவுண்டர் செய்து மக்களைக் கொன்று வருவதாக AIMIM நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார். உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குண்டர்-அரசியல்வாதியான அதிக் அகமதுவின் மகன் ஆசாத் ஜான்சி என்கவுன்டர் செய்தி சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் பாஜக ஆட்சியை ஒவைசி கடுமையாக சாடினார்.
பாஜகவை கேள்வி கேட்கும் ஆசாதுதின் ஓவைசி
AIMIM தலைவர் ஓவைசி, பாஜகவின் முன் பல கேள்விகளை முன்வைக்கிறார். "ஜுனைத் மற்றும் நசீரின் கொலையாளிகளையும் சுட்டுக்கொல்லுவீர்களா?" “ஜுனைத் மற்றும் நசீரைக் கொன்றவர்களை பாஜக சுட்டுக் கொல்லுமா? இல்லை, ஏனென்றால் நீங்கள் மதத்தின் பெயரால் என்கவுண்டர்களை செய்கிறீர்கள். நீங்கள் சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்த விரும்புகிறீர்கள், அரசியலமைப்பையே என்கவுன்டர் செய்பவர்கள்,” என்று AIMIM எம்பி தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றியபோது கூறினார் என்று ஏஎனை செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள காட்மீகா கிராமத்தில் வசிக்கும் 25 வயது நசீர் மற்றும் ஜுனைத் என்ற 35 வயது ஜூனா ஆகியோர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, பின்னர் அவர்களின் உடல்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹரியானாவில் பிவானியில் உள்ள லோஹாருவில் கண்டுபிடிக்கப்பட்டன.
எரிந்த காரில் இருவரின் சடலங்களும் இருந்தது அதிர்வலைகளை எழுப்பியது. ஜுனைத் மீது பசுக் கடத்தல் குற்றப் பதிவு இருந்தது மற்றும் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | பாலுறவில் ஆர்வமுள்ள ஆண்களின் வாழ்நாள் அதிகம்! ஜப்பான் ஆய்வு கூறும் ஆயுள் ரகசியம்
ஜான்சி என்கவுண்டர்
உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையினருடன் ஜான்சியில் நடந்த என்கவுன்டரில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் கொல்லப்பட்டதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர். பிரயாக்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குலாமுடன் ஆசாத் கொல்லப்பட்டார். இவர்கள் இருப்பிடத்தை சொல்பவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் பரிசு கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
"உமேஷ் பால் பிரயாக்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆசாத் மற்றும் குலாம் இருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் உத்தரப்பிரதேச மாநில எஸ்.டி.எஃப் குழு மேற்கொண்ட என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்" என்று சிறப்பு இயக்குநர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
கொலை வழக்கில் பிரயாக்ராஜில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அகமது ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நாளில் இந்த என்கவுன்டர் நடந்தது.
உத்தரப்பிரதேச மாநில எஸ்டிஎஃப் கண்காணிப்பு வளையத்தில் ஆசாத்
என்கவுன்டர் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு மோட்டார் சைக்கிளின் அருகே இரண்டு உடல்கள் கிடப்பதைக் காட்சிகள் காட்டியது. பின்னர் ஆம்புலன்ஸ் அவர்களை அழைத்துச் சென்றது. பிப்ரவரி 24 அன்று உமேஷ் பால் கொல்லப்பட்டதில் இருந்து அசாத் மற்றும் குலாம் ஆகியோர் காணவில்லை.
அவர்களைக் கண்டுபிடிக்க எஸ்.டி.எஃப் குழுக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. வியாழனன்று, அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றபோது, ஜான்சியில் எஸ்.டி.எஃப் குழுவினர் அவர்களை மறித்தபோது, அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்கு கொடுக்கப்பட்ட பதிலடித் துப்பாக்கிச் சூட்டில் இருவரும் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நாவேந்து குமார் மற்றும் விமல்குமார் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தினர்.
மேலும் படிக்க | குழந்தை பிறந்தால் லட்சக்கணக்கில் உதவித் தொகை! சலுகைகளை அள்ளி வழங்கும் தென் கொரியா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ