ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் உள்ள கைலாசகிரி மலைப்பகுதியில், மனிதர்களின் குறுக்கீட்டால் ஏற்பட்ட காட்டுத் தீ, புதன்கிழமையன்று அதிகாரிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. இது குறித்து ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், கைலாசகிரி மலையில் புதன்கிழமை வனப்பகுதிக்குள் புகுந்த சில மர்ம நபர்களால் ஏற்பட்ட காட்டுத் தீ, ஸ்ரீகாளஹஸ்தி கோயில் அருகே உள்ள கோசாலை வரை வேகமாக பரவியதால் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
காளஹஸ்தி கைலாசகிரி மலையில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. கோடை காலங்களில் சமூக விரோதிகள் அடிக்கடி இது போல் மலைகளுக்கு தீ வைப்பதால் செடி கொடிகள் மரங்கள் எரிந்து நாசமாகிறது என கூறப்படுகிறது. இந்த மலையில் யானை, சிறுத்தை, மான், மயில் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் மரங்களின் இலைகள் உதிர்ந்தும், புற்கள் காய்ந்தும் சருகாக உள்ளது.
தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டும், தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் உள்ளூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்து, கோசாலைக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அனைத்து வருகின்றனர். சாலையில் அடைக்கப்பட்டுள்ள 700-க்கும் மேற்பட்ட மாடுகளை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வரை தொடர்ந்து தீ எரிந்து வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தது வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பஞ்சாப் படிண்டாவில் ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு! 4 பேர் பலி!
மேலும் படிக்க | கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் அரசியலில் இருந்து விலகும் பாஜக மூத்த தலைவர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ