ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்... 80+ விமானங்கள் ரத்து..!!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 82 தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவின் 300 மூத்த ஊழியர்கள் மொத்தமாக மருத்துவ விடுப்பில் சென்றிருப்பதே இதற்குக் காரணம்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 82 தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவின் 300 மூத்த ஊழியர்கள் மொத்தமாக மருத்துவ விடுப்பில் சென்றிருப்பதே இதற்குக் காரணம். செவ்வாய் இரவு முதல் புதன்கிழமை காலை வரை 78 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏறக்குறைய 300 மூத்த கேபின் குழு உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி மொத்தமாக விடுப்பு எடுத்துக் கொண்டு, பின்னர் தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளனர். இது குறித்து சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனங்கள் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இணைவினால். இரு விமான நிறுவனங்களின் விமானிகளும் கேபின் குழு பணியாளர்களும் தங்கள் வேலைக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகின்றனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் வேலைக்கான புதிய நிபந்தனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை முயற்சிக்கிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நேற்று இரவு முதல் எங்கள் கேபின் குழு பணியாளர்கள் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர், இதன் விளைவாக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகியுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம். அதன் விளைவாக எங்கள் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க எங்கள் குழுக்கள் முனைப்புடன் செயல்படுகின்றன" என்றார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், "இந்த சிரமத்திற்கு எங்கள் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இந்த சூழ்நிலை எங்கள் சேவையின் தரத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை வலியுறுத்துகிறோம். விமானம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணத்தை முழுமையாக திரும்பப் பெறுதல் அல்லது வேறு தேதியில் மாற்று விமானத்தில் பயணம் செய்யும் வசதி வழங்கப்படும்" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இன்றும் இடைக்கால ஜாமின் கிடைக்கவில்லை.. காத்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!
பல பயணிகள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் தங்கள் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்து புகார் அளித்தனர். விமானங்கள் ரத்து செய்வது குறித்து தனக்கு எந்த தகவலும் இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளனர். X தளத்தில் சில "மிகவும் ஏமாற்றமடைந்த" பயணிகள் விமான நிலையத்திற்கு வந்த பிறகே, தங்கள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் கிடைக்கதாக கூறினர்.
"பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம். செயல்பாட்டுக் காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்," என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றுக்கு பதிலளித்துள்ளது.
கடந்த மாதம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் குழுவினரின் ஒரு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், விமான நிறுவனத்தின் நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்றும், ஊழியர்களை நடத்துவதில் சமத்துவம் இல்லை என்றும் குற்றம் சாட்டியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர் சங்கம் (AIXEU) என்ற பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமும், தவறாக நிர்வாகம் ஊழியர்களின் மன உறுதியை பாதித்ததாக குற்றம் சாட்டியது.
மேலும் படிக்க | Weather Update: இந்த மாநிலங்களில் வெப்ப அலை குறையும்; இங்கு மழை பெய்யும் IMD ALERT
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ