உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் மூடிய 22 அறைகள் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் ஒருவர் மனு தாக்கல் செய்து, அங்குள்ள இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளை கண்டறிய குழுவை அமைக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒருவர், தாஜ்மஹாலில் உள்ள 20 அறைகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், அங்கு இந்து சிலைகள் அல்லது புனித நூல்கள் உள்ளன என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறியவும், குழு அமைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ நீதிமன்ற நிராகரித்தது.


இப்போது இந்திய தொல்லியல் துறை (ASI) தாஜ்மஹாலின் சில அறைகளின் படங்களை வெளியிட்டுள்ளது. இவை சமீபத்தில் பராமரிப்பு பணிகள் நடந்த இடம். இந்திய தொல்லியல் துறையின் ஜனவரி 2022 அறிக்கையின் 20 வது பக்கத்தில்  தாஜ்மாஹாலில் அரிக்கப்பட்ட மற்றும் சிதைந்த சுண்ணாம்பு பூச்சு அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.



தாஜ்மஹால் மட்டுமல்ல, பாரம்பரிய மதிப்புள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட தளங்களிலும் இதுபோன்ற பாதுகாப்புப் பணிகள் செய்யப்படுகின்றன என்று அகழ்வாராய்ச்சி அதிகாரி ஒருவர் கூறினார். இந்த வகையில் தாஜ்மஹாலின் நிலத்தடி அறைகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



தாஜ்மஹாலின் பிரதான கல்லறையின் கீழ் நிலத்தடி அறைகள் அல்லது ரகசிய அறைகள் குறித்த செய்திகள் சமீப காலமாக வெளி வரும் நிலையில், இது தொடர்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாஜக ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ நீதிமன்றத்தில்  மே 4ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். தாஜ்மஹாலில் சுமார் 20 அறைகள் மூடப்பட்டுள்ளதாகவும், யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த அறைகளில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.


மேலும் படிக்க | தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe