புதுடெல்லி: நேற்று தில்லியில் நடந்த பாஜக தேர்தல் உயர்மட்ட குழு கூட்டத்தில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பாஜக தேசிய தலைமை 3 கட்டங்களாக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது. முதல் பட்டியல் தேர்தலில் எப்போதும் வெல்லாத அல்லது கடினமான தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியலில், பாரதிய ஜனதா சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அல்லது அதன் கையை விட்டு சென்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். 


இறுதியாக வெளியிடப்படும் மூன்றாவது பட்டியலில் நிச்சயமாக வெல்லக்கூடிய தொகுதிகளில் போட்டியிடும் தனது வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட இருக்கிறது.


மேலும் படிக்க - 2024ல் தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் - பிரதமர் மோடி


இதில் முதற்கட்ட பட்டியலில் தமிழகத்திலும் ஒரு சில வேட்பாளரின் பெயர்கள் இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையின் பெயரும் முதல் பட்டியலில் இடம் பெறலாம். அவர், ஈரோடு அல்லது கோவை தொகுதியில் நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களின் பெயர்களும் தமிழக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | திமுக மீது காங்கிரஸ் மனக்கசப்பு - லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட ஆலோசனை?


ஆனால், சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ’நான் இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை’ எனக்கூறி இருந்த நிலையில், இன்று காலை பத்திரிகையாளர் சந்தித்தபோது அவரின் தொனி மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


அதாவது, தலைமை எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்லி இருப்பது, அரசியல் வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவல்களை உறுதி செய்ய விதமாகவே உள்ளது


மேலும் படிக்க - திருச்சி சிவா என்னிடம் வெளிப்படையா சொன்னார்: ரகசியத்தை சொன்ன ஹெச் ராஜா


இதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்களை அனுப்பி வைக்கும் வரை பாரதிய ஜனதா கட்சிக்கு ஓய்வில்லை என ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழா மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததும் குக்றிப்பிடத்தக்கது.


"234 சட்டசபை தொகுதிகளையும் குறிவைத்து மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவடைந்தபோது பேசிய அண்ணாமலை இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த விழா மேடையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது, பிரதமர் மோடி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.


ஆனால்,  தமிழகத்தில் அண்ணாமலையின் பேச்சையும் செயல்பாடுகளையும் பூதக்கண்ணாடி ஸ்பீக்கர் போட்டு காட்டுவதாகவும், தேர்தல் முடிவு வந்தபிறகு தான் அண்ணாமலையின் உண்மையான நிலை தெரியும் என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | தூத்துக்குடியில் வெற்றி கொடி நாட்டப்போகும் கனிமொழி..! சாதகமாக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ