தூத்துக்குடியில் வெற்றி கொடி நாட்டப்போகும் கனிமொழி..! சாதகமாக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு

நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இருக்கும் நிலையில், அவருக்கு இப்போதே வெற்றி முகம் தெரிவதாக உடன் பிறப்புகள் கிசுகிசுக்க தொடங்கியிருக்கிறார்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 29, 2024, 06:59 PM IST
  • தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி வாய்ப்பு
  • சாதகமான வந்த ஸ்டெர்லைட் உச்சநீதிமன்ற தீர்ப்பு
  • எதிர்த்து போட்டியிடப்போகும் வேட்பாளர் யார்?
தூத்துக்குடியில் வெற்றி கொடி நாட்டப்போகும் கனிமொழி..! சாதகமாக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு title=

நாடாளுமன்ற தேர்தல் 2024 தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. அதிகபட்சம் மார்ச் 15 முதல் 20 ஆம் தேதிக்குள் லோக்சபா தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவது ஏறத்தாழ உறுதி. ஏனென்றால், கடந்த முறை அந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற அவர், இம்முறையும் அந்த தொகுதியிலேயே போட்டியிட விரும்புகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தூத்துக்குடி சென்று அத்தொகுதி மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

குறிப்பாக, கனமழை மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது களத்தில் இருந்து இரவு பகலாக வேலை பார்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களை கிராம வாரியாக சென்று நேரடியாக பார்த்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் உதவிகளை பெற்றுக் கொடுத்தார். மழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கும் கனிமொழிக்கு தொகுதியில் எவ்வித அதிருப்தியும் இல்லை.

மேலும் படிக்க | திமுக மீது காங்கிரஸ் மனக்கசப்பு - லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட ஆலோசனை?

மக்களிடையே நல்ல மதிப்பை பெற்று வைத்திருக்கும் அவர், எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது தான் எல்லோருடைய கேள்வியாக இருக்கிறது. திமுகவை சேர்ந்த உடன்பிறப்புகளும் இதையே சொல்கிறார்கள். அதற்கேற்ப, தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, மழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு எந்த நிவாரணமும் அறிவிக்காமல் வெறுமனே பேசிவிட்டு சென்றதால் அப்பகுதி மக்களுக்கு மத்திய அரசு மீது இன்னும் அதிருப்தி அதிகமாகியிருக்கிறது. கனிமொழியும் இது குறித்து நாடாளுமன்றம் முதல் மக்கள் மன்றம் வரை தவறாமல் கேள்வி எழுப்பிக் கொண்டு வருவதுடன் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதை மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கிறார்.

இந்த சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது சரியே என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, கனிமொழிக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அப்பகுதி மக்களிட் குரலை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதங்களை எடுத்து வைத்தது வெற்றியும் கண்டுள்ளது. இந்த தீர்ப்பு வெளியானவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் " தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்ரெட்லைட் ஆலைக்கு எதிராக திமுக அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது!" என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தூதுக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மெய்யநாதன் ஆகியோரையும் டேக் செய்திருக்கிறார். இந்த தீர்ப்பு நிச்சயம் கனிமொழியின் வெற்றியை தீர்மானிக்கும் இன்னொரு அம்சமாக அமைந்திருக்கிறது. எல்லாத திசைகளிலும் ஆதரவான நிலையே இருப்பதால் கனிமொழி எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களின் நிலை தான் கவலைக்குரியதாக இருக்கும் என திமுக உடன்பிறப்புகள் மகிழ்ச்சியோடு முனுமுனுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

மேலும் படிக்க | பிரதமரே தமிழ்நாட்டை வளர்க்கிறீங்களா? டேட்டாவுடன் மோடிக்கு வகுப்பெடுத்த பிடிஆர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News