தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா மாநாடு பல்லடம் மாதப்பூரில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கும் நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆவேசமாக பேசினார். அவர் பேசும்போது, "பொய்யை சொல்லி தமிழக மக்களை ஒரு கும்பல் ஏமாற்றி வருகிறது. காங்கிரஸ் தான் ஜனநாயகத்துக்கு ஆபத்து. ஜனநாயகத்தை கொன்றவர்கள் அவர்களே. 1974 ஆம் ஆண்டு இந்த ஜனநாயக கொலையை காங்கிரஸ் செய்தது. இந்தியா கூட்டணி என்பது குடும்ப கூட்டணி. ஒரே குடும்பங்கள் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் கட்சிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் கூட்டணி" என கடுமையாக விமர்சித்தார். திமுக முதல் சமாஜ்வாதி கட்சி வரை எல்லாமே குடும்ப கட்சிகள் என்றும் ஹெச் ராஜா சாடினார்.
மேலும் படிக்க | தமிழகம் வரும் மோடி! பல்லடத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு!
தொடந்து பேசிய அவர், "உதயநிதி, இன்பநிதி என ஸ்டாலின் குடும்பத்துக்கு திமுக மூத்த அமைச்சர்கள் சேவை செய்கிறார்கள். மூத்த அமைச்சர்கள் கேஎன் நேரு, துரைமுருகன் உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கு கூச்சமே இல்லை. மோடியை எதிர்க்க யாருமே இல்லை. மோடி vs Nobody என்ற நிலை தான் இருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்டம் கண்டு போய் இருக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட பாஜக ஆட்சிக் காலத்தில் அதிக நிதியை தமிழ்நாடு அரசுக்கு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது." என ஹெச் ராஜா பேசினார்.
இதனையடுத்து தான் திருச்சி சிவா தன்னிடம் என்ன சொன்னார் என்பதை வெளிப்படையாக பேசினார். இது குறித்து ஹெச். ராஜா பேசும்போது, " மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்தான மசோதா நிறைவேற்றிய பிறகு டெல்லி ஏர்போர்ட்டில் தன்னிசையாக நானும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவும் சந்தித்துக் கொண்டோம். அப்போது, இப்படியான சம்பவத்தை நாங்கள் செய்திருந்தால் மார்தட்டிக் கொண்டிருப்போம். ஆனால் நீங்கள் அப்படி ஏதுமே செய்யவில்லை" என கூறினார்.
"பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை கலைஞர் வீட்டு வசதி திட்டம் என பெயர் மாற்றி வைத்துவிட்டீர்களே. ஏன்? உங்களுக்கு வெட்கமா இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் கொடுத்தது மத்திய அரசு. கொரோனா காலத்தில் ரேஷன் கடைகளில் கொடுத்த பொருட்கள் எல்லாம் மத்திய அரசு கொடுத்தது. ஆனால், அதன் மீது திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. இந்த அரசுக்கு சூடு சுரணை இருந்தால் இப்படி செய்யலாமா?. தமிழ்நாட்டில் என்ன நிதி இருக்கிறது. 8 லட்சம் கோடி கடன்ற வாங்கி வைத்திருக்கிறீர்கள். தமிழ்நாடு கடன் வாங்கியதில் தான் முதலிடம்" என்றும் ஹெச்.ராஜா விமர்சித்தார்.
மேலும் படிக்க | அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ