திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். திருவனந்தபுரத்தில் இருந்து சூலூர் விமானபடை தளத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிக்காப்டரில் பல்லடம் வந்தார். மேடைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எல்.முருகனுடன் பிரதமர் மோடி திறந்தவெளி வாகனத்தில் வந்தடைந்தார். அவருக்கு மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கூட்டணிக் கட்சி தலைவர்கள் எல்லாம் சேர்ந்து 65 கிலோ கொண்ட விரலி மஞ்சள் மாலையை பிரதமர் மோடிக்கு அணிவித்தனர்.
மேலும் படிக்க | அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்
இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி," தமிழ்நாட்டுடனான எனது தொடர்பு அரசியல் சார்ந்தது அல்ல, அது இதயப்பூர்வமானது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதை பார்க்க முடிகிறது. தேசியத்தின் பக்கம் தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் கொங்கு பகுதியின் பங்கும் இருக்கிறது. பல்லடம் ஜவுளி தொழில் வளர்ச்சியில் சிறப்பாக இருக்கிறது. இந்திய பொருளாதாரமும் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடும் இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 40 லட்சம் பெண்களுக்கு இலவச சிலிண்டர்கள் கொடுத்துள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேற்றத்தை அடைந்தது. எம்ஜிஆர் ஆட்சியில் தமிழ்நாடு கல்வி மற்றும் சுகாதாரத்தில் வளர்ச்சி அடைந்தது. அதன்பிறகு ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும் சிறப்பாக ஆட்சி செய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தமிழ்நாடு இருந்தபோது எந்த வளர்ச்சியும் அடையவில்லை. 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மத்தியில் காங்கிஸூடன் கூட்டணியில் இருந்த திமுக எதுவும் செய்யவில்லை. இந்தியா கூட்டணியால் வெற்றி பெற முடியாது. அவர்கள் வெல்லமாட்டர்கள் என்பது டெல்லிக்கு தெரிந்துவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2024 ஆம் ஆண்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்." என பிரதமர் மோடி பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ