சீனாவுக்கு பொருத்தமான பதிலடி கொடுக்க, இந்திய இராணுவம் லடாக்கில் பெருமளவிலான ராணுவத்தை அனுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு படை பிரிவு என்பது 15 முதல் 20 ஆயிரம் வீரர்களை உள்ளடக்கியது. உத்தரபிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த புதிய படை பிரிவு கிழக்கு லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.


புதுடெல்லி (New Delhi): இந்திய ராணுவம் தனது பெருமளவிலான இராணுவத்தை லடாக்கில் (Ladakh) நிறுத்தியுள்ளது. சீனாவிற்கு (China) பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் (Indian Army) லடாக்கில் மற்றொரு பிரிவை நிறுத்தியுள்ளது. இதை அடுத்து கிழக்கு லடாக்கில் மட்டும், இந்திய ராணுவத்தின் மொத்தம் நான்கு பிரிவுகள் உள்ளன. மே மாதத்திற்கு முன்பு, இந்த பகுதியில் ஒரு படை பிரிவு மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தது.


ALSO READ |  ஜம்மு காஷ்மீரில் CRPF நடத்திய தாக்குதலில் மற்றொரு பயங்கரவாதி கொலை...!!!


 


இந்த புதிய பிரிவு கிழக்கு லடாக்கில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து பீரங்கிகளும் லடாக்கை விரைவில் எட்டும். LAC முழுவதும் சீனா தனது துருப்புக்களை அதிக அளவில் நிறுத்தியுள்ளது. லடாக்கில் சீனாவுடனான எல்லை, 856 கி.மீ நீளமானது ஆகும். கரகோரம் பாஸ் முதல் தெற்கு லடாக்கின் சுமூர் வரை இந்த எல்லை நீண்டுள்ளது. LACயின் தொடக்க பகுதியில் இருந்து, அதாவது காரகோரம் பாஸில் இருந்து தவுலத் பேக் ஓல்டி, டெப்சாங், கல்வான் பள்ளத்தாக்கு, பெங்காங் ஏரி, டெம்சவுக், கொய்ல் மற்றும் சுமூர் வரை சீனாவிலிருந்து ஊடுருவல் செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, எல்லையின் அமைத்து  பகுதிகளையும் கண்காணிக்க இந்திய ராணுவம் விரும்புகிறது.


முன்னதாக மே மாதத்தில், பதற்றம் தொடங்கிய உடனேயே உத்தரபிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து இரண்டு மலைபிரதேசத்திற்கான படை பிரிவுகள் லடாக்கில் (Ladakh)  நிறுத்தப்பட்டன. இந்த பிரிவில் உள்ள வீரர்கள் கிழக்கு லடாக் போன்ற கடுமையான மலைப் பகுதிகளில் பணியாற்றும் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டனர். சீனாவுடனான பதற்றங்கள் இரண்டு மாதங்களுக்குப் பிறகும் குறையவில்லை.  அதோடு மட்டுமல்லாமல், சீனாவிலிருந்து அதிக அளவிலான துருப்புக்கள், பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன. இதன் பின்னரே, லடாக்கில் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.


ALSO READ | இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை


மே மாதத்திற்கு முன்பு, லே அருகே நிறுத்தப்பட்ட ஒரு பிரிவு சியாச்சின் முதல் சுமூர் வரை முழுப் பகுதியையும் கண்காணிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தது. பாக்கிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் ஒரு எல்லையைக் கொள்ளும் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படை பிரிவு லே பகுதியை தளமாகக் கொண்ட 14 வது படை பிரிவு ஆகும். 8 வது பிரிவு பாகிஸ்தான் உடனான எல்லையில் உள்ள கார்கில், டிராஸ் ஆகிய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 3 வது படை பிரிவு சீனா உடனான எல்லையின் பாதுகாப்புக்கு பணியில் உள்ளது.