புதுடெல்லி: இந்திய எல்லையில் சீனாவுடன் பதற்றம் நிலவு சூழ்நிலையில், லடாக்கில் இந்திய விமானப்படையும் ராணுவமும் முழுமையாக கவனம் செலுத்துகின்றன. நாட்டை பாதுகாக்க, இந்திய ராணுவமும், விமானப்படையும் கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ராணுவத்தின் பீஷ்மா பீரங்கிகளும், விமானப்படையின் போர் மற்றும் போக்குவரத்து விமானங்களும் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளன. எந்த நேரத்திலும், எந்த சவாலையும் எதிர்கொள்ள எல்.ஏ.சி முதல் எல்.ஓ.சி வரை இந்திய விமானப்படை தயாராக உள்ளது என்று விமானப்படைத் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெற்றி சரித்திரத்தை எழுத இந்தியா தயார்!!!


நீர், நிலம் மற்றும் வான்வெளியில், தனது வீரத்தையும், தீரத்தையும், திறமையையும் காட்ட இந்தியா தயாராக உள்ளது. உலக சரித்திரத்தின் பொன்னேடுகளில் வீரம் என்ற மகிமையின் கதையின் புதிய அத்தியாயத்தை, தனது திறமை என்னும் எழுதுகோலால் எழுத சில மணித்துளிகள் போதும்.


Also Read |  'மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா?' 


கூட்டு பயிற்சிக்கு பொறுப்பேற்ற ராணுவம்


லடாக்கில் சீனாவின் செயல்களை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய கடற்படையோ, எதிரிக்கு பொருத்தமான பதிலை வழங்க தயார் நிலையில் உள்ளது. இதனிடையில், விமானப்படைத் தலைவர் எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்ஏ.சியை தாண்டியிருந்தாலும் சரி, எல்.ஓ.சியை தாண்டியிருந்தாலும் சரி, தக்க பாடம் புகட்ட இந்தியா தயார் என்பதை எதிரிக்கு ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக யார் சதி செய்தாலும், அவர்கள் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று விமானப்படைத் தலைவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.  


விரைவில் டிரெய்லர் வரவிருக்கிறதா?


இன்னும் 48 மணிநேரங்களில் பொய் பிரசாரம் செய்யும் எதிரிகளுக்க்கு இந்தியாவின் சூப்பர் டிரெய்லர் காட்டப்படும். இந்தியாவின் முன்னேற்பாடு மற்றும் வலிமையைப் புரிந்து கொள்ள இந்தியாவின் அதிரடி டிரெய்லரே போதுமானதாக இருக்கும். விமானப்படையின் 88வது ஆண்டுவிழாவில், நாட்டின் வலிமைமிக்க ரஃபேல் விமானம், நவீன அப்பாச்சி ஹெலிகாப்டர், உள்நாட்டு போர் விமானமான தேஜாஸ் என இந்தியா தனது பலத்தை பலமாக வெளிப்படுத்தும்.  விமானப்படையின் இந்த மும்மூர்த்திகளின் சக்தியின் வெளிப்பாடு, புதிய இந்தியாவுடன் மோதுவது இனி சுலபமானதாக இருக்காது என்று எதிரிக்கு நேரடி எச்சரிக்கை விடுப்பதாக இருக்கும்.


மும்மூர்த்திகளின் மேம்பட்ட 5 திறன்கள்


குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் எதிரிகளின் காலன் என்றே இந்தியாவின் மும்மூர்த்திகளாக அவதாரம் எடுத்திருக்கும் தேஜாஸ், ரஃபேல் மற்றும் அப்பாச்சியை சொல்லலாம். 4.5 தலைமுறை போர் விமானமான ரஃபேல், மணிக்கு 2222 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. லிபியா, சிரியா மற்றும் ஈராக் போரில் ரஃபேல் தனது வலிமையைக் காட்டியுள்ளது.


அப்பாச்சி கொடுக்கும் அப்பட்டமான நம்பிக்கை
அப்பாச்சி ஹெலிகாப்டரை இயக்க இரண்டு விமானிகள் தேவை.
இதன் பெரிய இறக்கைகளை இயக்க இரண்டு எஞ்சின்கள் தேவை.
மணிக்கு 280 கி.மீ என்ற வேகத்தில் செல்லக்கூடியது.
16 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தாக்கும் திறன் கொண்டது


தொடர்புடைய செய்தி | ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படும் ரகசியம் என்ன?
 
தேஜாஸின் வீரியம் 
Light Combat விமானம் தேஜாஸ், ஒற்றை இருக்கை கொண்ட போர் விமானம். ஒரே நேரத்தில் 1850 கி.மீ இலக்கு வைக்கக்கூடியது. 6560 கிலோ எடையுள்ள தேஜாஸில், விண்ணிலிருந்து விண்ணை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை மற்றும் லேசர் வழிகாட்டும் குண்டு பொருத்தப்பட்டுள்ளது.  


இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை கூட்டாக இணைந்து எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக, இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. அதாவது, போர் மேகம் சூழ்ந்தால், வான்வழி தாக்குதல்களையும், நிலவழித் தாக்குதல்களையும் எதிர்கொண்டு இந்தியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. LAC பகுதிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையின் கூட்டுப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.


இந்த கூட்டுப் பயிற்சியில் போர் மற்றும் போக்குவரத்து விமானங்களைத் தவிர, ஷினூக் ஹெலிகாப்டர், அப்பாச்சி ஹெலிகாப்டர், சி -17 குளோப்மாஸ்டர், சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் இடம் பெற்றுள்ளன. இவை இந்தியாவின் திறனுக்கு ஒரு உதாரணம் மட்டுமே.


லடாக் பகுதியில், இந்திய ராணுவமும் விமானப்படையும் எதிரிகளை அல்லும் பகலும் விழிப்புடன் கண்காணித்து வருகின்றன. பத்து மாதங்களுக்கு முன்னர் முப்படைகளின் தலைமைத் தளபதி (சிடிஎஸ்) நியமிக்கப்பட்டார் என்பதும், ராணுவம் மற்றும் விமானப்படைத் தலைவர்களின் அணுக்கமான நட்பும், இணக்கமான செயல்பாடுகளும், இப்போது இந்தியாவுக்கு எதிராக போர் மூண்டால், இந்தியாவிற்கு வலு சேர்க்கும் முக்கியமான விஷயங்களாக இருக்கும், வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும்.


 Also Read |  சீனா-பாகிஸ்தான் பதற்றங்களை அதிகரிக்கும்  இந்தியாவின் அதிரடி SMARTபரிசோதனை… 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR