Highway in Aksai Chin: சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி வழியாக புதிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. திட்டத்தின் படி, இந்திய எல்லையை ஒட்டி நெடுஞ்சாலை செல்லும்.
ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய என்கவுன்டரில் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி (Junior Commissioned Officer, JCO) உட்பட 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அணு சக்தி நிலையங்கள் மீது இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தாக்குதல் நடத்துவதை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தின் கீழ், நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை இரு நாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன.
இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை கூட்டாக இணைந்து எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக, இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. LAC பகுதிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையின் கூட்டுப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
ஜம்மு-காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LoC) பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் செக்டரில், பல மறைவிடங்கள் இருப்பதைக் கண்டறிந்த இந்திய ராணுவம் அங்கிருந்து பெரும் அளவிலான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் மீட்டுள்ளது.
பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ISI இந்திய பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து பயங்கரவாதிகளை பாதுகாக்கவும், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தவும், சில பிரத்யேகப் பணிகளுக்காக பெண்களை சேர்த்து வருகிறது.
லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஜூலை 18) அமர்நாத் கோயிலுக்குச் செல்வார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதிகளில் ஒரு பெரிய பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கத்துடன் சில பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கலாம் என உளவுத்துறை தகவல் கிடைத்த பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.
லடாக்கில், கால்வான் முதல் பாங்கோங் த்சோ வரை சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் நேரத்தில், கட்டுப்பாட்டுக் கோட்டில் பயங்கரவாதிகள் பெருமளவில் குவிந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன
பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மிகப்பெரிய ஷெல் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் வீரர்கள் மோட்டார் மற்றும் கனரக ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினார்கள்.
1971 போரை பாகிஸ்தானை நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் கொடுக்கும் பதிலடி பாகிஸ்தான் வரலாற்று புத்தகத்தில் இடம் பெரும் என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.