சீனா-பாகிஸ்தான் பதற்றங்களை அதிகரிக்கும் இந்தியாவின் அதிரடி SMARTபரிசோதனை…

இந்தியாவின் SMART (Supersonic Missile assisted release of Torpedo) hybrid weapon, இரு வெவ்வேறு ஆயுதங்களின் திறனை ஒருங்கிணைத்து செயல்படுகிறது. இது இந்தியாவின் செயல்திறனை அதிகரிப்பதால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கதி கலங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2020, 06:34 PM IST
சீனா-பாகிஸ்தான் பதற்றங்களை அதிகரிக்கும்  இந்தியாவின் அதிரடி SMARTபரிசோதனை…  title=

புதுடில்லி: இந்தியாவின் கலப்பின ஆயுதமான ஸ்மார்ட் (SMART (Supersonic Missile assisted release of Torpedo)) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படும் இந்த ஆயுதம், அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானின் அடிவயிற்றை கலங்கடித்துவிட்டது.  

டி.ஆர்.டி.ஓவின் வெற்றி

இந்த வெற்றிக்கு காரணமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புக்கு, (Defense Research and Development Organisation) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டர் மூலம் பாராட்டை தெரிவித்துக் கொண்டுள்ள ராஜ்நாத் சிங், 'புதிய வலிமையைப் பெற்ற பிறகு நீர்மூழ்கி எதிர்ப்பு என்ற நமது ஆயுதமானது, போரின் போது இந்தியாவின் பாதுகாப்பை வலுவாக இருப்பதை உறுதி செய்துள்ளத’ என்று குறிப்பிட்டார். டி.ஆர்.டி.ஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) மற்றும் இந்த உன்னதமான பணிக்கு உதவிய பிற அமைப்புகளையும் பணியாளர்களையும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.  

இது ஒரு கலப்பின ஆயுத அமைப்பு 

இரண்டு வெவ்வேறு ஆயுதங்களின் திறன்கள் ஆயுத அமைப்பாக உருவாக்கப்படுகின்றன. இது இந்திய ராணுவத்தின் செயல்திறனை அதிகரிக்கிறது. முந்தைய ஆயுதங்களின் திறன் மற்றும் வேகத்துடன் ஒப்பிடும்போது புதிய ஆயுதம் அதிநவீனமானது. அண்மைக் காலங்களாக இந்தியாவுடன், சீனாவும் பாகிஸ்தானும் எல்லைப் பகுதிகளில் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், இந்தியாவின் இதுபோன்ற நடவடிக்கைகளால் இரு நாடுகளும் கதி கலங்கிப் போயிருக்கின்றன.

ஸ்மார்ட் ஒரு சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஆகும், நடுத்தர எடை கொண்ட டார்பிடோவைக் கொண்டுள்ள SMART, இந்தியாவிற்கு கிடைத்த அதிநவீன ஆயுதம் என கருதப்படுகிறது. இன்றைய சூழலில், அண்டை நாடுகள், இந்தியாவின் மாபெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டு  அஞ்சும் நிலையை திறன் வாய்ந்த ஆயுதங்கள் ஏற்படுத்துகின்றன.  

இதையும் படிக்கலாமே | ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதும் ஆதரிப்பதும் முக்கியம்: சீனா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News