மத்திய பாதுகாப்பு அமைச்சர் (Defence Minister Rajnath Singh) ராஜ்நாத் சிங் அக்டோபர் 24-25 தேதிகளில் டார்ஜிலிங் Darjeeling மற்றும் சிக்கிமுக்கு (Sikkim) இரண்டு நாள் பயணம் மேற்கொள்வார் என்று அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் முன்னணி பகுதிகளுக்கு சென்று துருப்புக்களுடன் உரையாடுவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் அங்கு ஆயுத பூஜையையும் செய்வார். மேலும் எல்லை சாலைகள் அமைப்பு (BRO) மேற்கொள்ளும்  உள்கட்டமைப்பு திட்டத்தை தனது பயணத்தின் போது துவக்கி வைப்பார்.


ராஜ்நாத் சிங் ட்வீட் செய்து இந்த செய்தியை பகிர்ந்து கொண்டார்.


சிக்கிமில் உயரமான எல்லைப் பகுதியில் இராணுவ வீரர்களுடன் சிங் விஜயதசமியை கொண்டாடுவார் என்று செய்தி நிறுவனம் PTI  தெரிவித்துள்ளது. இந்திய சீனா எல்லையில் பதற்றம் நிலவும் இந்தஃ நேரத்தில், LAC பகுதியில் சிக்கிம் பிரிவில் எல்லைப் பகுதியில் இராணுவ வீரர்களுடன் விஜயதசமையை கொண்டாட பாதுகாப்பு அமைச்சரின் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை பிற்பகல் சிக்கிமுக்குச் செல்வார் என்றும், இதன் போது அவர் இந்திய இராணுவத்தின் பல எல்லைப் நிலைகளை பார்வையிடுவார் என்றும் ஒரு சில உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்குவதாகவும் PTI  வட்டாரங்கள் தெரிவித்தன. 


மேலும் படிக்க| Twitter-க்கு மத்திய அரசு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை.. காரணம் என்ன... !!!


பாதுகாப்பு அமைச்சர் பிரெஞ்சு துறைமுக நகரமான போர்டோவில் 2019 ஆம் ஆண்டு விஜயதசமையை கொண்டாடி 'ஆயுத பூஜை' செய்தார். சிங் கடந்த பல ஆண்டுகளாக அவர்  'ஆயுத பூஜை' செய்து வருகிறார், முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே அவர் இதை கடைபிடித்து வருகிறது. விஜயதசமியை கொண்டாட அவர் சிக்கிம் சென்றது படையினருக்கு மன உறுதியை அதிகரிக்கும் என்று ஒரு அதிகாரி கூறினார்.


கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை பகுதியில் இந்திய இராணுவத்தின் கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளும் மிக தீவிர எச்சரிக்கை நிலையில் உள்ளன. கிழக்கு லடாக்கில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக  எல்லை பகுதியில் பதற்றம் நிலவுகிறது, இது அவர்களின் உறவுகளை கணிசமாகக் குறைத்துவிட்டது. இந்த பிரச்சனையை தீர்க்க இரு தரப்பினரும் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் இராணுவ ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


மேலும் படிக்க | இந்தியா அமெரிக்கா இடையிலான 2+2 அமைச்சரவை கூட்டத்தினால் அச்சத்தில் உள்ள சீனா..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR