பெய்ஜிங்: சீனாவுக்கு (China) எதிராக உலகம் அணி திரள்வதை கண்டு சீனா அஞ்சுகிறது. இந்தியாவுடனான எல்லை தகராறு உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, பல நாடுகள் ஒன்றிணைந்து சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ளது, இந்தியாவிற்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆதரவை அளிக்கின்றன . இந்த சர்வதேச கூட்டணி சீனாவை தூக்கத்தை கெடுத்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) தனது பயத்தை மறைக்க அறிக்கைகளை அளிக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் வெள்ளிக்கிழமை அன்று, சீனாவின் பாதுகாப்பு நலன்களும் இறையாண்மையும் பாதிக்கப்பட்டால், சீனா அமைதியாக இருக்காது என்று கூறினார்.
இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் சீனாவிற்கு அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க சீனா தயாராக உள்ளது என சீன அதிபர் ஜி ஜின்பிங் காட்ட முயன்றார். இருப்பினும், உண்மை என்னவென்றால், சர்வதேச மட்டத்தில் சீனாவுக்கு எதிராக நெருக்குதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அமெரிக்கா இடையில் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பயத்தை மறைக்க, சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிக்கைகளை அளித்து வருகிறார்.
ஜின்பிங் இந்தியாவையும் அமெரிக்காவையும் (America) மறைமுகமாக குறிவைத்து, சீனா ஆதிக்கத்தை நிலைநாட்டவோ அல்லது பிராந்தியத்தை விரிவுபடுத்தவோ முயற்சிக்காது. ஆனால் சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்கள் புறக்கணிக்கப்பட்டால், அவை எந்த வகையிலும் பாதிக்கப்பட்டால், சீனா அமைதியாக இருக்காது என்று கூறினார்.
சீன அதிபர் மேலும் கூறுகையில், சீனாவின் பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவோ அல்லது நாட்டை பிரிக்கவோ முயற்சிப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். சீன மக்கள் நிச்சயமாக தக்க பதிலடி கொடுப்பார்கள். ஜி ஜின்பிங்கின் அறிக்கை சர்வதேச அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சியாகும் இது. சீனாவிற்கு நெருக்குதல் அதிகரித்துள்ள நிலையில், எந்தவொரு சூழ்நிலைக்கும் தான் தயாராக இருப்பதாக காட்ட முயற்சிக்கிறது.
ALSO READ | Twitter-க்கு மத்திய அரசு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை.. காரணம் என்ன... !!!
இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் ஆதரவு புதுடெல்லிக்கு உள்ளது. இது தவிர, கொரோனா தொற்றுநோயால் சீனாவை உலக நாடுகள் அனைத்தும் எதிரியாக பார்க்கின்றனர். சர்வதேச மட்டத்தில், சீனாவை தனிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இதில் வெற்றி கிடைத்துள்ளது. பல்முனை தாக்குதல்களால் அச்சத்தில் ஜின்பிங் உள்ளார் என்பதை அவரது அறிக்கையில் தெளிவாக தெரிகிறது.
அடுத்த வாரம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான 2+2 அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ (Mike Pompeo) டெல்லிக்கு வருகிறார். இதில் சீனாவிலிருந்து வரும் ஆபத்துகள் குறித்து விவாதிக்கும் என்று அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்திய எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் அக்டோபர் 26 மற்றும் 27 தேதிகளில் டெல்லியில் நடைபெறும். கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் இந்தியா வருகிறார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணை செயலர் டீன் ஆர். தாம்சன், இரு நாடுகளின் டூ பிளஸ் டூ கூட்டங்களில் இந்திய சீனா எல்லை குறித்து நிச்சயமாக விவாதிக்கப்படும். நிலைமையை நாங்கள் இன்னும் புரிந்து கொள்ள விரும்புகிறோம். இரு தரப்பினரும் அதாவது இந்தியாவும் அமெரிக்காவும், வன்முறையைத் தடுக்கவே முயற்சிக்கின்றது என்றார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR