Twitter-க்கு மத்திய அரசு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை.. காரணம் என்ன... !!!

நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் அவமதிக்கும் வகையில் சமூக ஊடக தளத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மத்திய அரசு வலியுறுத்தியது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2020, 10:42 AM IST
  • நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் அவமதிக்கும் வகையில் சமூக ஊடக தளத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மத்திய அரசு வலியுறுத்தியது.
  • இந்திய குடிமக்களின் உணர்வுகளை ட்விட்டர் மதிக்க வேண்டும் எனவும் ட்விட்டரிடம் தெரிவித்துள்ளது.
Twitter-க்கு மத்திய அரசு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை.. காரணம் என்ன... !!! title=

ட்விட்டர் (Twitter) தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு ( Jack Dorsey) எழுதிய கடிதத்தில், இந்திய வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டது தொடர்பாக கடுமையான கண்டனம் தெரிவித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் பி.டி.ஐ-யிடம் தெரிவித்தன.

நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் அவமதிக்கும் வகையில் சமூக ஊடக தளத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மத்திய அரசு வலியுறுத்தியது.

இது போன்ற முயற்சிகள் ட்விட்டருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் நடுநிலை மற்றும் நேர்மை குறித்த கேள்விகளையும் எழுப்புகின்றன என்று தகவல் தொழிநுட்ப அமைச்சக செயலர் அஜய் சாவ்னி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ | சீனாவின் உத்தரவின் பேரில் பூட்டான் பிரதமரிடம் பேசிய இம்ரான்... காரணம் என்ன..!!!

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள லே பகுதி, சீனாவை சேர்ந்த பகுதி என டிவிட்டரில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர், தனது கடிதத்தில், லெ (Leh) யூனியன் பிரதேசமான லடாக்கின் (Ladakh) தலைமையகம் என்றும், லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டும் இந்திய அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள் என்றும் ட்விட்டருக்கு நினைவூட்டியுள்ளது.

இந்திய குடிமக்களின் உணர்வுகளை ட்விட்டர் மதிக்க வேண்டும் எனவும் ட்விட்டரிடம் தெரிவித்துள்ளது. மேலும்  இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மதிக்காத வகையில், ட்விட்டர் மேற்கொண்ட எந்தவொரு முயற்சியையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, அது சட்டவிரோதமானது என்பதையும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ள, தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர், இதுபோன்ற முயற்சிகள் ட்விட்டருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் நடுநிலை மற்றும் நேர்மை குறித்த கேள்விகளையும் எழுப்புகின்றன என்று கூறியுள்ளார்.

ALSO READ | விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதை எதிர்த்து இலங்கை மேல்முறையீடு...!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News