ஐநாவில் பறக்கும் மூவர்ணக் கொடி.. இந்தியராய் பெருமை கொள்வோம்..!!
இந்தியாவின் பெருமைமிக்க தருணம்: நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா பதவிக்காலம் தொடங்கும் நிலையில் ஐநா வளாகத்தில் இந்திய மூவர்ண கொடி நிறுவப்படும்.
ஐநா சபை: ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியாவின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் திங்கள்கிழமை தொடங்கும் நிலையில், இந்தியாவின் மூவர்ணக் கொடி ஐ.நா பாதுகாப்பு சபை வளாகத்தில் நிறுவப்பட உள்ளது.
இந்தியாவிற்கான ஐ.நாவின் (UN) நிரந்தர பிரதிநிதி, திரு.டி.எஸ் திருமூர்த்தி மூவர்ண கொடியை நிறுவுவார், விழாவில் சுருக்கமாக உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, நார்வே, கென்யா, அயர்லாந்து மற்றும் மெக்ஸிகோ ஆகிய ஐந்து நாடுகள் ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற புதிய உறுப்பினர்களாக இணைய உள்ளன. 2021 இன் முதல் அதிகாரபூர்வ வேலை நாளான இன்று, அதாவது ஜனவரி 4ம் தேதியன்று நடைபெறும் ஒரு சிறப்பு விழாவின் போது, இன்று இணைய உள்ள ஐந்து புதிய நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் கொடிகள் ஐநா வளாகத்தில் நிறுவப்படும்.
நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ள எஸ்டோனியா, நைஜர், செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், துனிசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடனும், 5 நிரந்தர உறுப்பினர்களான, அமெரிக்கா (America), சீனா, பிரான்ஸ், ரஷ்யா, மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனும் புதிதாக இணைந்துள்ள இந்த 5 நிரத்தரமற்ற உறுப்பு நாடுகள் பணியாற்றும்
ஆகஸ்ட் 2021 இல் இந்தியா (India), ஐநா பாதுகாப்பு சபைக்கு தலைமை வகிக்கும். மேலும் 2022 இல் மீண்டும் ஒரு மாத காலத்திற்கு ஐநாசபைக்கு தலைமை தாங்கும்.
ஐநா பாதுகாப்பு சபைக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும்.
கொடி நிறுவும் விழா என்னும் பாரம்பரியம் கஜகஸ்தானால் 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | COVAXIN: 50 லட்சம் தடுப்பூசியை வாங்க பாரத் பயோடெக்குடன் பிரேசில் ஒப்பந்தம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR