புதுடெல்லி: 'லவ் ஜிஹாத்' க்கு எதிராக சட்டங்களை உருவாக்குவது குறித்த விவாதம்  தீவிரமடைந்துள்ளது. சில மாநில அரசுகள் லவ் ஜிஹாத்திற்கு எதிராக சட்டங்களை கொண்டு வர இருப்பதாக கூறியுள்ளன. சில மாநிலங்களில் இதற்கான வரைவு சட்டம் இயற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்களை ஏற்படுத்துவதாக, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh), ஹரியானா (Haryana), மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh), கர்நாடகா (Karnataka) மற்றும் குஜராத் (Gujarat) ஆகிய மாநிலங்கள் கூறியுள்ளன. இதற்கிடையில், AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி அதை அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கை என குற்றம் சாட்டியுள்ளார்.


AIMI தலைவர் அசாதுதீன் ஒவைசி (Asaduddin Owaisi), 'அப்படியானால், சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். அத்தகைய சட்டம் அரசியலமைப்பின் 14 மற்றும் 21 பிரிவுகளுக்கு எதிரானது. அவர்கள் சட்டத்தைப் பற்றி பேசுவதற்கு முன் அரசியலமைப்பைப் படிக்க வேண்டும்” என்றார். இதனுடன், வேலையின்மை பிரச்சனையில் இருந்து இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்ப பாஜக (BJP)  லவ் ஜிஹாத் போன்ற பிரச்சினைகளை எழுப்புவதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.


 உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  (Yogi Adityanath) லவ் ஜிஹாத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளார். லவ் ஜிஹாத்துக்கு எதிரான உத்தேச சட்டத்தை மாநில உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவை முன்வைக்க வாய்ப்பு உள்ளது. உத்தரபிரதேசத்தில், 'சட்டவிரோத தடை மசோதா' என்ற பெயர் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


ALSO READ | அசாதுதீன் ஒவைசி இந்துத்துவா குறித்து பதிவிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட்..!!!


லவ் ஜிஹாத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்ற உள்ளதாக மத்தியப்பிரதேச அரசும் கூறியுள்ளது. 'மத்தியப் பிரதேச மத சுதந்திரச் சட்டம் 2020 வரைவு' கிட்டத்தட்ட தயாராக உள்ளது என்று மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட சட்டத்தில் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை வழங்குவதற்கான அம்சம் உள்ளது. மேலும், கடந்த காலங்களில் நடந்த இத்தகைய திருமணங்களும் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும். 


பல்லப்கர் மாணவர் கொலை செய்யப்பட்ட பின்னர், லவ் ஜிஹாத்துக்கு எதிராக ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஹரியானா அரசும் கூறியுள்ளது. 


ALSO READ | ட்விட்டரில் #BoycottNetflix ட்ரெண்டிங் ஆகி வரும் காரணம் என்ன..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR