புதுடெல்லி: அகில இந்திய மஜ்லிஸ்-எ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி (Asaduddin Owaisi) மீண்டும் இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஒரு சமூகத்திற்கு மட்டுமே அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற பொய்யை அடிப்படையாகக் கொண்டது இந்துத்துவா என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகத்தில் பதிவிட்ட தனது சர்ச்சைக்குரிய அறிக்கையில், ஒவைசி (Asaduddin Owaisi) , 'ஒரு சமூகத்திற்கு மட்டுமே அனைத்து அரசியல் சக்தியும் இருக்க வேண்டும், முஸ்லிம்களுக்கு அரசியலில் பங்கேற்க உரிமை இருக்கக்கூடாது என்ற பொய்யின் அடிப்படையில் இந்துத்துவா கட்டப்பட்டுள்ளது' என்றார். பாராளுமன்றத்திலும் சட்டமன்றக் கூட்டங்களிலும் நாங்கள் இருப்பது இந்துத்துவத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான எங்கள் முயற்சி என்று அவர் மேலும் கூறினார்.
”நாங்கள் நாடாளுமன்றத்தையோ (Parliament) அல்லது சட்டசபையையோ வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டால், சங்கம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று அவர் கூறினார். ஒரு ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக ஒவைசி இந்த சர்ச்சை அறிக்கையை வெளியிட்டார்.
ஒவைசி, சர்ச்சைகுரிய வகையில் கருத்துக்களை வெளியிடுவது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்பே, அசாதுதீன் ஒவைசி உண்ர்ச்சியை தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய அறிக்கைகளை அளித்து வருகிறார். இந்துக்கள் மற்றும் இந்துத்துவாவுக்கு எதிராக விஷத்தைத் தூண்டுவதற்கான எந்த வாய்ப்பையும் அவர் விட்டுவிடுவதில்லை என்று கூறலாம். அதே நேரத்தில், அவர் தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register- NPR) தனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளார். AIMIM தலைவர் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை உருவாக்குவதற்கான பணி ஆரம்பம் ஆனால், அதனை எதிர்ப்பதற்குரிய நடவடிக்கைகளும் விரைவில் இறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் முதல் கட்டம் தேசிய மக்கள் தொகை பதிவு என்று அசாதுதீன் ஒவைசி கூறினார்.
ALSO READ | அத்தை- மாமா மகன்-மகளை திருமணம் செய்வது சட்ட விரோதம்.. எங்கே தெரியுமா...!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR