வாஷிங்டன்: நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் (American Elections) நடக்கவுள்ளது. அமெரிக்க டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் (Joe Biden), தான் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் (America) 'இயற்கை பங்காளியான' இந்தியாவுடனான (India) உறவை வலுப்படுத்துவது தனது முன்னுரிமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆன்லைனில் நடந்த ஒரு நிகழ்வில், இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்த பிடென், இந்தியா தனது பாதுகாப்புக்காகவும், பிராந்திய நன்மைக்காகவும் நமது நல்ல நட்பு நாடாக இருக்க விரும்பும் என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிகழ்வை பெக்கான் கேபிடல் பார்ட்னர்ஸின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆலன் லெவென்டால் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் துணை ஜனாதிபதி, இந்தியாவும் அமெரிக்காவும் 'இயற்கை பங்காளிகள்' என்று கூறினார். இந்த செயலுத்தி கூட்டாளித்துவம் இரு நாடுகளின் பாதுகாப்பிற்கு அவசியமானது மற்றும் முக்கியமானது என்று பிடன் கூறினார். துணை ஜனாதிபதியாக தனது எட்டு ஆண்டு காலப் பணிகளைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னர், தனது கட்சியின் ஆட்சியின் போது, அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் வகித்த பங்கைப் பற்றி தான்  பெருமைப்படுவதாக அவர் கூறினார்.


ALSO READ: அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அசத்தும் இந்திய வம்சாவளிப் பெண்!!


இரு நாடுகளின் உறவுகளில் புதிய உத்வேகத்தை உண்டாக்குவதில் உதவுவதும், இந்தியாவுடனான மூலோபாய கூட்டாளித்துவத்தை வலுப்படுத்துவதும் ஒபாமா-பிடன் நிர்வாகத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருந்தது. நான் அதிபரானால், இந்தியாவுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்.’ என்று பிடன் உறுதியளித்தார். உலகளாவிய தொற்றான கொரோனா வைரஸ் (Corona) பரவலை தடுப்பதில் டோனல்ட் டிர்ம்ப் (Donald Trump) கையாண்ட முறைகளை சுட்டிக்காடிய பிடன், டிடம்ப் துவக்கத்திலிருந்தே எச்சரிக்கைகளை புறக்கணித்ததாகவும், அதற்கான ஏற்படுகளை செய்ய மறுத்துவிட்டதாகவும், நாட்டைக் காப்பாற்ற தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.