Central Government Schemes: சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களுக்கு பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பை வழங்க மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றின் மூலம் நலிந்த பிரிவில் உள்ள மக்களின் நிதி நிலை உயர்வதோடு அவர்கள் சுய மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் இயல்பான வாழ்க்கையை வாழ பெரிய வகையில் உதவி கிடைக்கின்றது. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APS) ஆகியவை மத்திய அரசு நடத்தும் முக்கிய மூன்று நிதி பாதுகாப்பு திட்டங்களாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மூன்று திட்டங்களின் நோக்கம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு திட்ட நன்மைகள் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன. தற்போது 75 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த மூன்று திட்டங்களின் பலனைப் பெறுவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று திட்டங்களைப் பற்றியும் இந்த பதிவில் விரிவாக காணலாம்.


Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana: பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா


PMJJBY ஒரு வருடாந்திர ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இதில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.436 பிரீமியம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ், பயனாளியின் இறப்புக்கு பிறகு, அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை கிடைக்கும். 18 முதல் 50 வயது வரை உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் இதுவரை 21.67 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதுவரை 8,60,575 க்ளெய்ம்களுக்கு ரூ.17,211.50 கோடி செலுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இந்த மத்திய ஊழியர்களுக்கு நற்செய்தி: கிராஜுவிட்டி வரம்பு உயர்த்தப்பட்டது, புதிய வரம்பு என்ன?


Pradhan Mantri Suraksha Bima Yojana: பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா


இந்தத் திட்டம் ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீட்டை வழங்குகிறது. இந்த திட்டத்தின் பிரீமியம் தொகையும் மிகக் குறைவாக வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையையை எந்த ஒரு நபரும் வசதியாக செலுத்த முடியும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற, ஒரு நபர் ஆண்டுக்கு வெறும் ரூ.20 மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) தொடர்பான அனைத்து விஷயங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.


- PMSBY திட்டத்தின் நோக்கம், இந்தியாவின் அதிக மக்கள் தொகைக்கு பாதுகாப்பு காப்பீடு வழங்குவதாகும். 
- முன்னதாக, இதன் ஆண்டு பிரீமியம் ரூ.12 ஆக இருந்தது.
- இந்த பிரீமியனம் தொகை ஜூன் 1, 2022 முதல் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
- இது ஏழை மக்களும் எளிதில் செலுத்தக்கூடிய தொகையாக உள்ளது இதன் சிறப்பம்சம்.
- காப்பீடு செய்யப்பட்ட நபர் விபத்தில் இறந்தால், காப்பீட்டுத் தொகை அவரது நாமினிக்கு வழங்கப்படும். 
- இத்திட்டத்தின் பயனை 18 வயது முதல் 70 வயது வரை பெறலாம். 
- பயனாளி 70 வயது அல்லது அதற்கு மேலான வயதுடையவராக இருந்தால், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா நிறுத்தப்படும். 
- ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 1 க்கு முன் காப்பீட்டுத் தொகை உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.


Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம்


APY எனப்படும் அடல் பென்ஷன் திட்டம், இந்தியாவின் உழைக்கும் வர்க்க மக்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய ஆண்டுகளில் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. அடல் பென்ஷன் யோஜனா 60 வயது முதல் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1,000 முதல் ரூ.5,000 -க்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஓய்வூதியத்தின் அளவு சந்தாதாரர்களின் பங்களிப்பைப் பொறுத்தது. பெண்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பை இந்தத் திட்டம் கண்டுள்ளது. மொத்த சந்தாதாரர்களில் சுமார் 47 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | சூப்பர் செய்தி!! குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிப்பது உறுதி: நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ