இன்றும் இடைக்கால ஜாமின் கிடைக்கவில்லை.. காத்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!
Arvind Kejriwal Bail: இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போக்கை பார்க்கும் போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமின் எதுவும் வழங்கப்படவில்லை.
Arvind Kejriwal News: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக தற்போது திகார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்குவதில் காக்க வைத்துள்ளது. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு மத்தியில், இன்று ஜாமீன் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கை நாளை மறுநாள் (மே 9) அல்லது அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தது.
இந்த வழக்கு முடிந்தால் நாளை மறுநாள் ஜாமீன் குறித்த அறிவிப்பை என்று நீதிபதி கன்னா கூறினார். அது முடியாவிட்டால் அடுத்த வாரத்திற்கு வழக்கை ஒத்திவைப்போம் எனக் கூறினார்.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வரும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஏப்ரல் 9 (செவ்வாய்க்கிழமை) அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவரது மனுவை நிராகரித்தது. அதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஏப்ரல் 10 (புதன்கிழமை) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போக்கை பார்க்கும் போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமின் எதுவும் வழங்கப்படவில்லை.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வரும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மே ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். அன்றைய தினம் கூட எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை மே ஒன்பதாம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால், அடுத்த வாரம் நான் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ