ரூ. 1,710 கோடி! ஒரே இடியில் காலி!
கங்கை மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த கோரி பீஹார் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பீகாரில் உள்ள பகல்பூரின் சுல்தன்கச் மற்றும் கஹாரியவை இணைக்கும் கங்கை மீது 1,710 கோடி செலவில் நான்கு வழிப்பாதை கொண்ட பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. கடந்த சனிக்கிழமை அதிகாலை லேசாக இடி இடித்ததில் இந்த நவீன மேம்பாலம் இடிந்து விழுந்துவிட்டது, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3.1 கிமீ நீளமுள்ள இந்த நவீன பாலத்தை ரூ.1,710 கோடி செலவில் எஸ்பி சிங்லா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கட்டிவந்தது.
இந்த சம்பவம் குறித்து பாகல்பூர் நிர்வாகம் தெரிவிக்கையில், இப்பகுதியில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவில் பலத்த காற்று, மழை மற்றும் பயங்கர இடி இடித்தது. இந்த இயற்கை சீற்றத்தின் காரணமாக சுல்தாங்கஞ்ச் முனையிலிருந்து 4 மற்றும் 6 துருவ எண்களுக்கு இடையில் 100 அடிக்கு மேல் உள்ள மேற்கட்டுமானம் இடிந்து விழுந்ததுவிட்டது என்று அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது, மேலும் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறியது. பாலத்தை கட்ட தரமற்ற பொருட்களை பயன்படுத்தியதால் தான் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுல்தாங்கஞ்ச் எம்எல்ஏ லலித் நாராயண் மண்டல் இந்த சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் இச்சம்பவம் குறித்து கூறியவர், இந்த பாலம் இடிந்து விழுந்தது கட்டுமானத்தின் தரம் குறித்து கேள்வியை எழுப்பி இருக்கிறதுக்கு. இது குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்த பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறினார். தற்போது இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார், மேலும் சாலை கட்டுமானத்துறை அமைச்சர் நிதின் நபின், இந்த எதிர்பாராத சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடம் விசாரித்து வருகிறார்.
மேலும் படிக்க | VIDEO: எமனாக வந்த பாறைக்கல்; மனம் பதற வைக்கும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR