குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு-வும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்க்கட்சிகள் சார்பில் பீகாரைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவரை ஆதரிப்பார் எனத் தகவல் வெளியானது. கடந்த இரண்டு குடியரசுத் தலைவர் தேர்தல்களில் செய்தது போல், இம்முறையும் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க மாட்டார் எனப் பரவலாக விவாதிக்கப்பட்டது. 


கடந்த 2012-ம் ஆண்டு நிதீஷ் குமார் பீகாரில் பாஜகவுடன் இணைந்து ஆட்சியில் இருந்தபோது, ​​பாஜக வேட்பாளரை ஆதரிக்காமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரித்தார். அதேபோல், 2017-ம் ஆண்டு ராஷ்டிரய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருந்தபோதும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை ஆதரித்தார்.


மேலும் படிக்க | Draupadi Murmu: பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜூன் 25ம் தேதி மனுதாக்கல் செய்வார்


ஆனால், இம்முறை திரௌபதி முர்முவை எதிர்த்து வாக்களித்தால் அது நிதிஷ் குமாருக்கு நிதிஷ்குமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். திரௌபதி முர்மு பழங்குடி சமூகத்திலிருந்து வந்தவர் என்பதால் அவரை எதிர்த்து வாக்களிக்கும் பட்சத்தில், பழங்குடியினருக்கு எதிரானவர் என்று முத்திரை குத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


அதே சமயம், ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசால் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டத்திற்கு பீகாரில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது. இந்த சூழலின் பின்னணியில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | Draupadi Murmu: யார் இந்த திரெளபதி முர்மு: பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் பின்னணி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR