புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்தவர் திரெளபதி முர்மு.
ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையைப் பெற்ற திரௌபதி முர்மு, ஒடிசா மாநிலத்திலிருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மாநிலத்தின் ஆளுநராக பணிபுரிந்தார் என்ற வரலாற்றுப் பதிவையும் ஏற்படுத்தினார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
BJP-led NDA announces Draupadi Murmu name as Presidential candidate for the upcoming elections pic.twitter.com/4p1IOizaQ0
— ANI (@ANI) June 21, 2022
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நியமனம் தொடர்பான கலந்தாலோசனை இன்று டெல்லியில் நடைபெற்றது. பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத்சிங் என பல மூத்தத் தலைவர்கள் பங்கேற்றனர்.
உயர்மட்ட கலந்தாலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளாராக அறிவித்தார்.
Draupadi Murmu, BJP's nominee for Presidential elections likely to file her nomination on June 25: Sources
— ANI (@ANI) June 21, 2022
திரௌபதி முர்மு, ஜூன் 25ம் தேதியன்று மனுதாக்கல் செய்வதாகவும் தகவல்கள் உறுதிசெய்தன.
PM Modi affirms, "I am confident she will be a great President," on Draupadi Murmu as BJP's choice for Presidential candidate pic.twitter.com/uS5AZztUNj
— ANI (@ANI) June 21, 2022
ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்மு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என நான் நம்புகிறேன் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
மதிப்பிற்குரிய திரௌபதி முர்மு, தனது வாழ்க்கையை சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அர்ப்பணித்துள்ளார்.
அவர் சிறந்த நிர்வாக அனுபவம் கொண்டவர், சிறந்த ஆளுநராக பணியாற்றிவர். அவர் நம் நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என்று நம்புகிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR