பெட்ரோல் வாகனங்களின் பதிவு நிறுத்தி வைப்பு! EV வாகன விற்பனையை ஊக்குவிக்கும் தந்திரம்
Ban On Two Wheeler Registration: மின்சாரம் அல்லாத இரு சக்கர வாகனங்களின் பதிவு நடப்பு நிதியாண்டில் தடை செய்யப்பட்டுள்ளது. பைக், ஸ்கூட்டர் பதிவுக்கு தடை விதிக்கப்பட்டதால், மக்கள் கலக்கமடைந்துள்ளனர்...
Two-wheeler Registration BAN: சண்டிகரில் மின்சாரம் அல்லாத அதாவது பெட்ரோல் இரு சக்கர வாகனங்களின் பதிவு நடப்பு நிதியாண்டின் எஞ்சிய காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சண்டிகர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. சண்டிகர் வாகனப் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இரு சக்கர வாகனங்களின் பதிவு பிப்ரவரி 10 முதல் மார்ச் இறுதி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
வாகனப் பதிவு தொடர்பான இந்தத் தடை காரணமாக வாகன விற்பனையாளர்கள் வாகனப் பதிவுப் பணியை கூட, 'வாகன்' போர்ட்டலில் முடிக்க முடியாமல் தவிப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாக, இரு சக்கர வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இனி உயர் பாதுகாப்பு எண் தகடு (HSRP) மற்றும் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவற்றைப் பெற முடியாது.
மேலும் படிக்க | EPFO: ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்! புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
இதுபோன்ற சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் தனது வாகனத்தை கூட பயன்படுத்த முடியாமல் தவிப்பதாக மக்கள் வருந்துகின்றனர். ஏற்கனவே இருசக்கர வாகனம் வாங்கியவர்கள் அல்லது வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.
பலருக்கு இரு சக்கர வாகனங்களே வாழ்வாதரமாக உள்ள நிலையில், நடைமுறை சவால்களை கருத்தில் கொள்ளாமல் அரசு முடிவெடுத்துள்ளதாக மக்கள் குறைகூறுகின்றனர்.
மேலும் படிக்க | Indian Railways: வெறும் 3 கி.மீ தூரம் செல்லும் ரயில்! பயண கட்டணமோ ₹175!
மின்சார இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி மொத்த இரு சக்கர வாகனங்களில் 35 சதவீதம் இல்லை என்ற நிலையில் அதன் விற்பனை 35 சதவீதமாக இருக்க வேண்டும் என்று நிர்வாகம் எப்படி அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கேள்விகள் எழுகின்றன.
அதே நேரத்தில், எலெக்ட்ரிக் வாகனத்துடன், பெட்ரோலால் இயங்கும் ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு என்பதால், பலரும் இரு சக்கர வாகனம் வாங்க வேண்டுமா என்ற அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
அதேபோல, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களும் இல்லாத நிலையில், வாகன உற்பத்தி நிறுவனங்களின் நலனை மட்டும் அரசு கவனத்தில் கொள்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ