Indian Railways: வெறும் 3 கி.மீ தூரம் செல்லும் ரயில்! பயண கட்டணமோ ₹175!

Indian Railways: இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.  சுமார் 2.50 கோடி மக்களுக்கு உயிர்நாடியாக செயல்படுகிறது இந்திய ரயில்வே. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2023, 06:53 PM IST
  • அஸ்ஸாமின் திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 4286 கிமீ தூரத்தை உள்ளடக்கிய ரயில் சேவை.
  • இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.
  • நாக்பூரிலிருந்து அஜ்னி வரையிலான பயணம் வெறும் 9 நிமிடங்களில் நிறைவடைகிறது.
Indian Railways: வெறும் 3 கி.மீ  தூரம் செல்லும் ரயில்! பயண கட்டணமோ ₹175! title=

இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.  சுமார் 2.50 கோடி மக்களுக்கு உயிர்நாடியாக செயல்படுகிறது இந்திய ரயில்வே. இந்தியாவில், நாட்டின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு செல்லும் நீண்ட ரயில் பயணங்கள் மட்டுமல்லாது,  குறுகிய பயணங்களும் இருக்கின்றன. இன்று நாம் இந்தியாவில் ரயில்கள் கடந்து செல்லும் மிகக் குறுகிய மற்றும் மிக நீண்ட ரயில் சேவை பற்றி அறிந்து கொள்ளலாம். இது மிகவும் சுவாரஸ்யமானது. ரயில்வே வெறும் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ரயில்களை இயக்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நாங்கள் பேசுவது பயணிகள் ரயிலைப் பற்றியே தவிர, மெட்ரோ அல்லது உள்ளூர் ரயிலைப் பற்றி அல்ல.

மிக குறுகிய தூரத்திற்கான ரயில் சேவை

விவேக் எக்ஸ்பிரஸ் என்னும் ரயில், அஸ்ஸாமின் திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 4286 கிமீ தூரத்தை உள்ளடக்கிய ரயில் சேவையை வழங்குகிறது. அதேசமயம் நாக்பூரிலிருந்து அஜ்னி வரை இந்திய இரயில்வேயின் மிக குறுகிய தூர ரயில் சேவை 3 கிமீ ஆகும். நாக்பூருக்கும் அஜ்னிக்கும் இடையே 3 கி.மீ. பயண தூரத்திற்கான ரயில் சேவை இயக்கப்படுகிறது. நாக்பூரிலிருந்து அஜ்னி வரையிலான பயணம் வெறும் 9 நிமிடங்களில் நிறைவடைகிறது. இந்த பயணத்திற்கு, பொது வகுப்பிற்கு, 60 ரூபாயும், ஸ்லீப்பர் வகுப்பிற்கு, 175 ரூபாயும் செலுத்த வேண்டும். இருப்பினும், 9 நிமிட பயணத்திற்கு ஸ்லீப்பர் வகுப்பை முன்பதிவு செய்வதில் பிரயோஜனம் எதுவும் இல்லை என்பதால், பெரும்பாலான மக்கள் பொது வகுப்பில் பயணம் செய்கிறார்கள்.

மேலும் படிக்க | ரயிலில் உணவு ஆர்டர் செய்வர்களுக்கு ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!

மிக நீண்ட தூரத்திற்கான ரயில் சேவை

நாட்டின் மிக நீளமான ரயிலின் பெயர் விவேக் எக்ஸ்பிரஸ். சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அசாமின் திப்ருகார் முதல் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை செல்கிறது. இது இந்தியாவின் மிக நீண்ட தூர ரயில் ஆகும். இந்த ரயில் சுமார் 4300 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. இந்தப் பயணத்தை முடிக்க 80 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். இந்த பயணத்தின் போது, ​​இந்த ரயில் 57 நிலையங்களில் நின்று, மொத்தம் 9 மாநிலங்கள் வழியாக செல்கிறது. இந்த பாதை இந்தியாவில் மட்டுமல்ல, துணைக்கண்டத்திலேயே மிக நீளமானது. இது உலகின் 24வது பெரிய ரயில் பாதையாகும்.

மேலும் படிக்க | இனி ரயில் டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்.. இந்த code ட்ரை பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News