ராகுல் காந்தி `தீயவர், மதத்திற்கும் ராமருக்கு எதிரானவர், புதிய சகாப்தத்தின் ராவணன்` -பாஜக
Rahul Gandhi Is Ravana: `புதிய யுகத்தின் ராவணன் ராகுல் காந்தி, இவர் தீயவர்கள், மதத்திற்கு எதிரானவர், ராமருக்கு எதிரானவர். பாரத் நாட்டை அழிப்பதே இவர்களின் ஒரே குறிக்கோள் என பாஜக பதிவு
Rahul Gandhi Latest News: பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் படத்தை வெளியிட்டு அவரை "புதிய யுகத்தின் ராவணன்" என்று தலைப்புடன் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், "புதிய யுகத்தின் ராவணன் இங்கே இருக்கிறார். இவர் தீயவர்கள், மதத்திற்கு எதிரானவர், ராமருக்கு எதிரானவர். பாரத் நாட்டை அழிப்பதே இவர்களின் ஒரே குறிக்கோள் எனப் பதிவிட்டுள்ளனர்.
பாஜக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள போஸ்டரில் ராகுல் காந்தியின் 7 தலைகள் இடம்பெற்றுள்ளது. அதில் பாரத் ஆபத்தில் உள்ளது என்று எழுதப்பட்டு இருக்கிறது. படத்தின் கீழே ராவணன் என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டு உள்ளது. இதற்குக் கீழே ஜார்ஜ் சோரோஸ் இயக்கித்தில் காங்கிரஸ் கட்சித் தயாரிப்பு என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
ராகுலை காந்தி ஜார்ஜ் சோரோஸ் இணைந்து பாஜக பேச காரணம் என்ன?
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ரா பேரணிவில் ஜார்ஜ் சோரோஸ் பங்கேற்றார். இது தவிர, 'ஓபன் சொசைட்டி அறக்கட்டளை' என்ற அரசு சாரா அமைப்பின் (என்ஜிஓ) அமைப்புக்கு அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சொரோஸ் நிதியளிப்பதாகவும், அதன் துணைத் தலைவர் சலில் ஷெட்டி காங்கிரசின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றதாகவும் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ராகுலை காந்தி சலில் ஷெட்டி இணைந்து பாஜக பேச காரணம் என்ன?
பிப்ரவரி 17 அன்று, பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, பாரத் ஜோடோ யாத்ராவில் ராகுல் காந்தியுடன் சலில் ஷெட்டி ஒன்றாகக் காணப்பட்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இது தவிர, மற்றொரு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா அதே தேதியில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் பிரவீன் சக்ரவர்த்தியின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. பாஜகவை பொறுத்தவரை சக்ரவர்த்தியும் மோடி அரசுக்கு எதிரானவராகக் கருதப்படுகிறார்.
ராகுல் காந்தி மீது ஸ்மிருதி இரானி கூறிய குற்றச்சாட்டுகள் என்ன?
ஜூன் 28 அன்று, ஸ்மிருதி இரானி ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். ஸ்மிருதி கூறியது- ராகுல் காந்தி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது ஜார்ஜ் சொரோஸுக்கு நெருக்கமானவர்களை சந்தித்தார். ராகுலின் வருகையின் போது வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கான நிகழ்ச்சியை நடத்துவதில் வட அமெரிக்காவின் இஸ்லாமிய வட்டத்தைச் சேர்ந்த தன்சீம் அன்சாரி ஈடுபட்டதற்காகவும், அன்சாரிக்கு ஜமாத்-இ-இஸ்லாமியுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜார்ஜ் சோரோசை கடுமையாக விமர்சித்த ஜெய்சங்கர்
அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் வயதானவர், பணக்காரர், பிடிவாதமானவர், ஆபத்தானவர் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வர்ணித்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் தேர்தலில் தங்களுக்கு விருப்பமான ஒருவர் வெற்றி பெற்றால், அந்த தேர்தல் அருமையானது, நன்றாக இருந்தது என்று நினைக்கிறார்கள், ஆனால் முடிவு அவர்களுக்கு எதிராக வந்தால், நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என குறைபாடுகளைக் கண்டறியத் தொடங்குகிறார்கள் என ஜார்ஜ் சோரோசை கடுமையாக தாக்கி பேசினார்.
"மோடி ஜனநாயகவாதி அல்ல" -ஜார்ஜ் சோரோஸ்
ஜார்ஜ் சோரோஸ் ஒரு அமெரிக்க பில்லியனர் தொழிலதிபர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் பிரதமர் மோடி ஜனநாயகவாதி நாடு அல்ல என்று 8 மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அவர் குறுக்கிய காலத்திற்குள் பெரிய தலைவராக வருவதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தான காரணம் என்றார். இந்தியா ஒரு இந்து தேசமாக மாற்றுவதற்கு முயற்சியில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது எனக் குற்றம் சாட்டிய அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசை மிகவும் கடுமையாக சாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் குடியுரிமை திருத்தச் சட்டம், அதாவது இந்தியாவில் சிஏஏ (CAA) மற்றும் காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை நீக்குதல் குறித்தும் பிரதமர் மோடியை விமர்சித்தார்.
'ஓபன் சொசைட்டி அறக்கட்டளை' இந்தியாவிற்கு எப்பொழுது வந்தது?
ஜார்ஸ் சோரெஸ் 1993 இல் 'ஓபன் சொசைட்டி அறக்கட்டளை' தொடங்கினார். இதன் மூலம் கல்வி, சுகாதாரம், மனித உரிமை ஆகிய துறைகளில் பணியாற்றி சுமார் 100 நாடுகளுக்கு சென்றுள்ளார். அவர் இதுவரை 32 பில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளதாக அவரது இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் பல சர்வதேச நிறுவனங்களுக்கும் நிதியளிக்கிறார்கள். இவரின் அமைப்பு 1999 இல் முதன்முறையாக இந்தியாவிற்குள் நுழைந்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வந்தது. 2014 ஆம் ஆண்டில், ஓபன் சொசைட்டி இந்தியாவில் மருத்துவம், நீதி அமைப்பு மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு நிதியளிக்கத் தொடங்கியது. 2016 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் மூலம் நிதியளிப்பதை இந்திய அரசாங்கம் தடை செய்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ