Meghalaya Assembly Election 2023: பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்
BJP Poll Manifesto: மேகாலயா சட்டமன்றத் தேர்தலை அடுத்து, இன்று பாஜக சாபில் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேகாலயா சட்டமன்றத் தேர்தல் 2023: பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா மேகாலயாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேத்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டார். மேகாலயாவுக்கான தேர்தல் அறிக்கையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று நட்டா கூறினார். மேகாலயா கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் நிறைந்த மாநிலம். மாநிலம் செழிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையின் கீழ் அதை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம். மேகாலயாவில் பாஜக ஆட்சி அமைந்தால், 7வது ஊதியக் குழுவை அமல்படுத்தி, ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் ஜே.பி.நட்டா வாக்குறுதி அளித்துள்ளார். இதுமட்டுமின்றி, பெண் குழந்தைகளுக்கு கேஜி வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. இது தவிர, மாநிலத்தின் விதவை பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.24 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
மேகாலயா சட்டமன்றத் தேர்தலை அடுத்து பாஜக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? அந்த வாக்குறுதிகள் அவர்களுக்கு பயன் அளிக்குமா? மேகாலயா மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுமா? பாஜகவின் தொலைநோக்கு பார்வை என்ன? போன்றவற்றை குறித்து பார்ப்போம்.
மேலும் படிக்க: பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு ராகுல் காந்தியைக் கண்டு மத்திய அரசுக்கு பயமா?
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் பட்டியல்:
-- தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ஜே.பி.நட்டா, பாஜக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 7வது ஊதியக் குழுவின் படி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
-- விதவை பெண்கள் மற்றும் ஒற்றைத் தாய்மார்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ.24,000 ஆயிரம் உதவித் தொகையை பாஜக அறிவித்துள்ளது.
-- அனைத்து ஊழியர்களுக்கும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படும்.
-- பெண் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
-- பிரதமர்-கிசான் சம்மான் நிதியின் கீழ் மேகாலயாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையை ஆண்டுக்கு ரூ.2,000 உயர்த்துவதாக பாஜக அறிவித்துள்ளது.
-- பெண் குழந்தைகள் பிறக்கும் போது அவர்களுக்கு ரூ.50,000 மதிப்புள்ள பத்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
-- உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஓராண்டில் இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
-- மூத்த குடிமக்களின் ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கப்படும்.
-- மாநிலத்தில் நிலவும் ஊழல் வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும்.
-- நிலமற்ற விவசாயிகளுக்கு 3,000 ரூபாயும், மீனவர்களுக்கு 6,000 ரூபாயும் ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்படும்.
தேர்தல் வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையின் மூலம் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அளித்துள்ளார். இது இவர்களுக்கு வெற்றியைத் தேடித் தருமா என்று மார்ச் 2 ஆம் தேதி வரை காத்திருப்போம்.
மேகாலயாவில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும். மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு முன் முழு வீச்சுடன் களத்தில் காணப்படுகின்றன.
மேலும் படிக்க: 'ஐய்யோ...' பிரபலத்தை பார்த்ததும் கூறிய பிரதமர் - ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ