காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் பயணத்தை ரத்து செய்தார். மத்திய அரசாங்கத்தின் அழுத்தத்தின் காரணமாக, விமான நிலையம் தங்கள் தனியார் ஜெட் தரையிறங்க அனுமதிக்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதனால்தான் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் செல்லும் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது எனக் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் வாரணாசி விமான நிலையமும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும் ராகுல் காந்தி வரவிருந்த சார்ஜர் விமானத்தை அவர்கள் ரத்து செய்துவிட்டதாக விமான நிலையம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
வாரணாசியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருந்தார். இன்று வாராணசி சென்று சாமி தரிசனம் செய்த பின்னர், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் அரசின் அழுத்தத்தம் காரணமாக விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசல் காரணமாக ராகுல்காந்தி பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய் குற்றச்சாட்டி உள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, "வாராணசி விமான நிலைய நிர்வாகம், ராகுல் காந்தி வரவிருந்த விமானத்தை விமான நிறுவனமே பிப்ரவரி 13 ஆம் தேதி இரவு 9.16 மணிக்கு ரத்து செய்வதாக பிப்ரவரி 13 அன்று அஞ்சல் அனுப்பப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய் கூறுகையில், வாரணாசியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி வருவதாக கூறினார். அவரது விமானம் இரவு 11 மணியளவில் வாரணாசியை அடைய இருந்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி தரிசன பூஜை செய்துவிட்டு பிரயாக்ராஜ் செல்லவிருந்தார். ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் தொண்டர்கள் பாபத்பூர் விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால் ஜனாதிபதி வருகையை காரணம் காட்டி ராகுல் காந்திக்கு வர அனுமதி வழங்கப்படவில்லை.
ஜனாதிபதியின் வருகையை காட்டி விமான நிலையம் சாக்குபோக்கு கூறியதாகவும், உண்மை அதுவல்ல, அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு உட்பட்டு விமானம் ரத்து செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ராகுல் தனது பயண திட்டத்தையும் ரத்து வேண்டியதாயிற்று. ராகுல் காந்தியைக் கண்டு பாஜக அரசு பயப்படுவதாகவும், அதனால் வாரணாசியில் உள்ள விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை வழிநடத்தியதில் இருந்து இந்திய பிரதமர் கவலையில் உள்ளார். இப்போது, அவர்கள் ராகுலை தொந்தரவு செய்கிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ