உ.பி., தேர்தல்: 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும்: அமித் ஷா
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், 403 தொகுதிகளில், பா.ஜ., கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
உ.பி., தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று (வெள்ளிக்கிழமை) சிரத்து, கௌசாம்பி போன்ற பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது அமித் ஷா கூறுகையில், கடந்த 4 கட்ட தேர்தல்களில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஏற்கனவே தோல்வியடைந்து விட்டன. கடந்த 4 கட்ட தேர்தல்களில் உ.பி. முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். இதுவரை நடந்த வாக்குப்பதிவை பார்க்கும்போது சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. 300-க்கும் மேற்பட்ட இடங்களுடன் உ.பி.யில் மீண்டும் பா.ஜ.க. அரசு அமைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்ட அமித் ஷா, "2014-ல் பாஜகவை வெற்றி பெற வைத்தீர்கள். அதேபோல 2017 மற்றும் 2019-ல் பாஜகவை வெற்றி பெறச் செய்தீர்கள். இப்போது 2022-லும் அதை நீங்கள் (மக்கள்) செய்ய வேண்டும் என்றார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், 403 தொகுதிகளில், பா.ஜ., கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
SP-BSP குடும்ப கட்சி:
எஸ்பி-பிஎஸ்பியை கிண்டல் செய்த அமித் ஷா, "உ.பி.யில் நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன, நான் நான்கு கட்டங்களிலும் சுற்றி வந்துள்ளேன். இந்த நான்கு கட்டத் தேர்தலிலேயே சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகளின் நிலை முடிவுக்கு வந்துள்ளது. உ.பி.யில் 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நமக்கு முன்னால் உள்ள சமாஜ்வாதி பார்ட்டி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை சாதிவெறி மற்றும் குடும்பக் கட்சிகள் ஆகும். இவர்கள் ஊழல் செய்யும் கட்சிகள். அவர்களின் ஆட்சியில் மாஃபியா மற்றும் பாகுபலிகளின் சகாப்தம் இருந்தது. இந்த மாநிலம் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் தாமரை சின்னத்தின் பட்டனை அழுத்த வேண்டும் என மக்கள் மத்தியில் பேசினார்.
மேலும் படிக்க: இந்திய பிரதமர் ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார் -ராகுல் காந்தி
அகிலேஷ் மீது தாக்குதல்:
கோவிட் தடுப்பூசியைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, "நாட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டபோது, உங்கள் ஆராய்ச்சியால், இந்திய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று மோடி ஜி நாட்டு விஞ்ஞானிகளை வாழ்த்தினார். ஆனால் அகிலேஷ் பாபு ட்வீட் செய்து, "இது மோடி தடுப்பூசி, யாரும் போட்டுக்கொள்ள வேண்டாம்" என்று பதிவிட்டார். ஆனால் 10 நாட்களில் பயத்தில் அகிலாஷ் பாபு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஓடி வந்தார்.
கொரோனா காலத்தில், நாட்டிலுள்ள 80 கோடி மக்களுக்கும், உத்தரபிரதேசத்தில் 15 கோடி மக்களுக்கும், ஒரு நபருக்கு மாதம்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கும் பணியை நரேந்திர மோடி ஜி 2 ஆண்டுகளாக மேற்கொண்டார்.
மேலும் படிக்க: "மாநிலங்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துள்ளன": மக்களவையில் பிரதமர் மோடி
சமாஜ்வாதி பார்ட்டி என்றால் என்ன? அமித் ஷா விளக்கம்:
சமாஜ்வாதி பார்ட்டி சொத்தைகளை கொள்ளை அடிக்க, அதன் குடும்ப உறுப்பினர்களை பதவியில் உட்கார வைக்க நினைக்கிறார்கள். சமாஜ்வாதி என்றால்.. SP- S என்றால் சொத்து, P என்றால் குடும்பம். அகிலேஷ் முதல்வராக இருந்தபோது, தன் குடும்பத்தைச் சேர்ந்த 45 பேரை வெவ்வேறு பதவிகளில் அமர வைத்தார். சில நாட்களுக்கு முன் கான்பூரில் சோதனை நடந்தது. அங்கு பல ரூபாய் நோட்டுகளின் மூட்டை கண்டுபிடிக்கப்பட்டது.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் மசோதாவை நாங்கள் கொண்டு வந்தபோது, இங்கு ரத்த ஆறுகள் ஓடும் என்று அகிலேஷ் பாபு கூறி வந்தார். ஏய்! அகிலேஷ் பாபு, ரத்த ஆறுகளை ஓடுவதை விடுங்கள்.. இங்கு ஒரு கூழாங்கல்லைக்கூட யாரும் எறியத் துணியவில்லை என்றார்.
மேலும் படிக்க: குட் நியூஸ்: ஏழைகளுக்கு இலவச ரேஷனுடன் சேர்த்து ஒரு கிலோ நெய் வழங்கப்படும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR