Govt Actions To Empowering Women: பாஜக தலைமையிலான் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றது. அறிவிப்புகளுக்கு முன்னதாக, பட்ஜெட் உரையை தொடங்கிய நிதியமைச்சர், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட மக்களுக்கு மக்களுக்கு பாஜக அரசு செய்த சாதனைகளாக சில விஷயங்களைக் குறிப்பிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகளிருக்காக என்ன செய்திருக்கிறது என்பதை குறிப்பாகவும் சுருக்கமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிடார். அதில், மகளிருக்கு அதிகாரம் அளிப்பதற்காக மத்திய அரசு செய்த முக்கிய விஷயங்களை நிதியமைச்சர் குறிப்பிட்டார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டவற்றில் முத்தலாக் ஒழிப்பு, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.



பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் 


பெண்கள் அதிகாரம் பெறுவதை வரையறுக்கும் பல விஷயங்களில், அவர்களுக்குக் அதிகாரம் கொடுப்பது முக்கியமான ஒன்றாகும். இயலாமை நிலையில் இருந்து பெண்களை முன்னேற்ற அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் முக்கியமானவை. நீண்ட காலமாக இருந்த நடைமுறைகளை மாற்ற அரசு சட்டங்கள் கொண்டு வருவதும் இட ஒதுக்கீடு, கல்வியில் முக்கியத்துவம் கொடுப்பது போன்ற பல விஷயங்களைச் சொல்லலாம். அதில் முத்தலாக் ஒழிப்பு 33 சதவிகித இட ஒதுக்கீடு முக்கியமானவை என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.


மேலும் படிக்க | Budget 2024: தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர்?


33 சதவிகித இடஒதுக்கீடு


மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது ஒரு சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், இதுவொரு கொள்கை முடிவு தான், அமல்படுத்தப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.


மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு 2023இல் அறிவிக்கப்பட்டாலும் எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்பான நிச்சயமற்ற நிலைக்கு காரணம் தொகுதி மறு சீரமைப்பு என்ற மிகப் பெரிய பணி ஆகும். தொகுதி சீரமைப்பு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் தேர்தலில் தான் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வரும்.  ஆனால், இதற்கான பாதை வகுக்கப்பட்டுவிட்டது. 


முத்தலாக் முறை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்ததும்,  இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், 2019 முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதும் மைல்கல் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Budget 2024: இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் சலுகைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ