அரசு அதிகாரிகள் தங்களுக்கு வரும் பரிசுகளை உயரதிகாரிகள் அனுமதி இல்லாமல், ஏற்க முடியாது என அரசு அதிரடி அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேசம் மாநிலத்தில் BJP தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பலவரு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், அரசின் ஆய்வுக்கூட்டங்களில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது, அதிகாரிகள் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும் ஆகியவற்றை தொடர்ந்து மற்றொரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். 


அரசு அதிகாரிகள் யாரிடம் இருந்து பரிசுப் பொருட்களை வாங்கக் கூடாது என்பதே அந்த அறிவிப்பு. இதற்கான அறிவிப்பை அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் மகேஷ் குப்தா வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி “பரிசுப் பொருட்களுடன் யாரும் சட்ட மன்ற வளாகம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்குள் நுழைய கூடாது. உயரதிகாரிகள் முன் அனுமதியின்றி அரசு அலுவர்கள் பரிசுப் பொருட்களை யாரிடம் இருந்தும் பெறக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் இந்த அறிவிப்பு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குவதற்கு மிகச்சிறந்த முறையாக பரிசுப் பொருட்கள் வழங்குவது காலம்காலமாக இருந்து வருகிறது. புதிய வருடப்பிறப்பிற்கு காலண்டர் வழங்குவது, ஹோலி பண்டிகைக்கு உலர் பழங்கள், தீபாவளிக்கு வெள்ளி பொருட்கள் கொடுப்பது என பல்வேறு வகைகளில் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் நிலையில் உத்தரபிரதேச மாநில இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.