சித்ராவுக்கு சிக்கல்.. நாட்டை விட்டு வெளியே செல்ல முடியாது.. `லுக் அவுட் நோட்டீஸ்`
NSE Scam: சிபிஐ, தனது எப்ஐஆரில், தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பரதாரர், என்எஸ்இயின் அறியப்படாத அதிகாரிகளுடன் சதி செய்து, என்எஸ்இயின் சர்வர்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.
புது டெல்லி: தேசிய பங்குச் சந்தையில் உள்ள "கோ-லொகேஷன்" வசதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பான புதிய உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சித்ரா ராமகிருஷ்ணா, மற்றொரு முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நாராயண் மற்றும் முன்னாள் தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க "லுக் அவுட்" சுற்றறிக்கையையும் வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஐ என்ன சொல்கிறது?
மத்திய புலனாய்வு அமைப்பு டெல்லியை சேர்ந்த OPG செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் உரிமையாளரும், விளம்பரதாரருமான சஞ்சய் குப்தா மற்றும் பலர் மீது NSE இன் பங்குச் சந்தை தொடர்பான மிக ரகசியமான தகவல்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது.
சிபிஐ, தனது எப்ஐஆரில், தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பரதாரர், என்எஸ்இ-ன் அறியப்படாத அதிகாரிகளுடன் சதி செய்து, என்எஸ்இ-யின் சர்வர்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் படிக்க: இமாலய சாமியாருக்கு இந்திய பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? பெரிதாகும் விவகாரம்
2010 முதல் 2012 வரையிலான ஆண்டுகளில் மும்பை என்எஸ்இ அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு இரகசிங்களை வழங்க இணை இருப்பிட வசதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது.
சிபிஐ புலனாய்வு நிறுவனம் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் NSE-ஐ சேர்ந்த சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது.
சித்ரா ராமகிருஷ்ணனுக்கு 3 கோடி அபராதம்:
சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ரூ.3 கோடியும், என்எஸ்இ மற்றும் அதன் முன்னாள் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளான ரவி நாராயண், சுப்பிரமணியன் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும், தலைமை ஒழுங்குமுறை மற்றும் குறைதீர்ப்பு அதிகாரி வி ஆர் நரசிம்மனுக்கு ரூ.6 லட்சமும் செபி அபராதம் விதித்துள்ளது.
பல கேள்விகளுக்கு விரைவில் விடை:
என்எஸ்இ முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. முகம் அறியாத யோகிகளின் விருப்பத்தின் பேரில் அவர் முக்கிய முடிவுகளை எடுத்து வந்தாகக் கூறப்படுகிறது. தன் திறமையால் உயர்ந்த பதவியில் பணி அமர்ந்த சித்ரா முகம் அறியாத ஒருவருக்கு எப்படி முக்கிய ரகசியங்களை கொடுக்க முடிந்தது. என்ன தான் நடந்தது? இப்படி பல கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும் என்று நம்புவோம்.
மேலும் படிக்க: இதுவரை காணாத மிகப்பெரிய மோசடி: வங்கிகளுக்கு ரூ. 22,842 கோடி நாமம் போட்ட நிறுவனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR