வெளிநாடுகளில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு, பயனர்களின் தகவல்களை அங்கீகரிக்கப்படாத முறையில் அனுப்பியதற்காக,  348 மொபைல் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறும் வகையில் செயல்பட்ட இந்த செயலிகளை இந்த உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. உரிய அனுமதியின்றி இந்தியர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்ட 348 மொபைல் செயலிகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளதாக, மக்களவையில், கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து பதிலளித்த மத்திய இணை அமைச்சர், “உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் அடிப்படையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ள மொபைல் செயலிகளை முடக்கியது. ஏனெனில் இதுபோன்ற தரவு பரிமாற்றங்கள் , இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை மீறுவதாகும்” எனக் கூறினார்.


மேலும் படிக்க | 'பொருளாதார சீரழிவு': இலவச அரசியலை கட்டுப்படுத்த விரும்பும் உச்ச நீதிமன்றம்


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்த செயலிகளை சீனா உட்பட பல்வேறு நாடுகள் உருவாக்கியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த 348 செயலிகள் மீதான தடைக் காலம் குறித்து Meity எதுவும் குறிப்பிடப்படவில்லை.


இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69A-ன் கீழ், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட தளங்களை பொது மக்கள் பயன்பாட்டிலிருந்து முடக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. 


மேலும் படிக்க | பிரதமரையும் மத்திய அரசையும் வம்புக்கு இழுக்காதீங்க - வானதி சீனிவாசன்


மேலும் படிக்க | Election: இந்த ஏழு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ