சந்திரபாபு கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? முன்னாள் முதலமைச்சர் கைது பின்னணி
Chandrababu Naidu in police custody: சட்டப்படி வழக்கு விசாரணையை எதிர்கொள்வேன் என சூளுரைக்கும் சந்திரபாபு நாயுடு! தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு சாலை போக்குவரத்து முடக்கம்
சென்னை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக் காலத்தில் ஆந்திர மாநில இளைஞர் மேம்பாட்டு துறையில் சுமார் 370 கோடி வரை ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
"நான் எந்த முறைகேடு அல்லது ஊழலும் செய்யவில்லை. சி.ஐ.டி., முறையான தகவல் இல்லாமல் என்னைக் கைது செய்து, ஆதாரங்களைக் காட்டச் சொன்னேன், ஆனால் அவர்கள் காட்ட மறுத்துவிட்டனர். எப்.ஐ.ஆரில் தேவையில்லாமல் என் பெயரை இணைத்துவிட்டார்கள்" என்று ஆந்திரப் பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என். சந்திரபாபு நாயுடு போலீஸ் காவலில் செல்லும்போது தெரிவித்தார் என ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு மீது போடப்பட்ட பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) 2021 இல் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | முதல் முறையாக இந்தியா வந்துள்ள ஜோ பிடன்! பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை!
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 50 (1) (2) கீழ் சந்திரபாபு நாயுடுவுக்கு கைது வாரண்ட் வழங்கப்பட்டது. என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. வழக்கை திசை திருப்புகின்றனர். சட்டப்படி வழக்கு விசாரணையை எதிர்கொள்வேன் என்றும், என் மீது சுமத்தப்பட்ட ஊழலில் உண்மையில்லை. கட்சியினர் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று தெரிவித்தார்.
ஆனால், இதே சந்திரபாபு நாயுடு, சில நாட்களுக்கு முன்னதாக, " நான் கைது செய்யப்படுவேன் " என கூறியிருந்தார் என்பதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்களும் தெலுங்கு தேச கட்சியின் தொண்டர்களும் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் பேருந்துகள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க | முதல் முறையாக இந்தியா வந்துள்ள ஜோ பிடன்! பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை!
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் தமிழக மற்றும் ஆந்திர பேருந்துகள் அனைத்தும் அந்தந்த பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து, வேலூர் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் 40 தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 63 ஆந்திர மாநில அரசு பேருந்துகள், 27 தனியார் பேருந்துகள் என தற்போதைக்கு மொத்தம் 130 பேருந்துகள் ஆந்திராவிற்கு இயக்கப்படவில்லை.
பேருந்து போக்குவரத்து தடைப்பட்டதால் ஆந்திர செல்லும் பயணிகள் மற்றும் தமிழகத்திற்கு திரும்பும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இயக்கப்படுவதாக தெரிகிறது.
மேலும் படிக்க | ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது! ஜாமீனில் வெளிவரமுடியாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ