இந்தியாவில் இருந்து நிலவுக்கு சென்ற சந்திரயான்-3  விண்கலம் தற்போது உறக்க நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது மீண்டும் தனது பணியை ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை சந்திரனின் தென் துருவத்தில் சூரியன் உதிக்கும்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் சந்திரயான் -3 மிஷனின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த தயாராகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயம்


சந்திரனில் தற்போது இரவு நேரம் காரணமாக விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் கடந்த 15 நாட்களாக தூக்க நிலையில் உள்ளனர். ஆனால் சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும் போது, அவர்களின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள சந்திரயான்-3 (Chandrayaan-3) தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயம் ஏற்பட்டதும், பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யக் காத்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் மற்றும் பிரக்யானுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவோம் என்று நம்புவதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.


விக்ரம் லேண்டரை எழுப்ப தயாராகி வரும் இஸ்ரோ


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ விண்ணில் ஏவியது. இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் பயணம் மேற்கொண்ட நிலையில், ஆகஸ்ட் 23 அன்று நிலவில் தரையிறங்கியது. இதையடுத்து தனது பணியையும் வெற்றிகரமாக செய்து வந்தது. ஆனால் தற்போது உறக்க நிலையில் இருந்து வருகின்றது என்று யாரும் அறிந்ததே. இந்நிலையில் விக்ரம் லேண்டர் மீண்டும் அதனை எழுப்பி, தனது பணியை ஆரம்பிக்க இஸ்ரோ தயாராகி வருகிறது என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.


லேண்டர் மற்றும் ரோவர் செப்டம்பர் 22 ம் தேதி உறக்க நிலையில் இருந்து எழுப்பப்படும்


விக்ரம் லேண்டர் செப்டம்பர் 4 அன்று உறக்க நிலையில் வைக்கப்பட்டது. 14 நாட்கள் நீடிக்கும் சந்திர இரவில், சந்திரனின் சுற்றுச்சூழலானது அபரிமிதமான இருள் நிலவும். அதோடு அங்குள்ள தட்ப நிலை கிட்டத்தட்ட -200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும். இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் அது உறக்க நிலைக்கு செல்லப்பட்டது. இந்நிலையில், லேண்டர் மற்றும் ரோவர் செப்டம்பர் 22 ம் தேதி உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரனில் அடுத்த சூரிய உதயத்தின் போது சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி, செயற்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையில் உள்ளனர்.


மேலும் படிக்க | ஆதித்யா எல்1 திட்டம் எதற்கு...? - ஈஸியாக விளக்கிய மயில்சாமி அண்ணாதுரை


ஆதித்யா-எல்1


சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலக அளவில் பெறூம் பாராட்டை பெற்றம். அதனை தொடர்ந்து, செப்டம்பர் 2, 2023 அன்று, அதன் முதல் சூரியப் பணியான ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தபட்டது. இந்தியாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்யும் முதல் செயற்கைக்கோள் பணி இதுவாகும். PSLV-C57 ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | சூரிய புயல்களை கண்டறிவது உள்ளிட்ட வான் ஆராய்ச்சிக்காக இந்தியாவின் ஆதித்யா எல் 1 தயார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ