சூரிய புயல்களை கண்டறிவது உள்ளிட்ட வான் ஆராய்ச்சிக்காக இந்தியாவின் ஆதித்யா எல் 1 தயார்

Aditya-L1:Indian observatory: ஆதித்யா எல்1 திட்டம் மூலம் சூரியனை ஆராய முயற்சித்து வருகிறது இஸ்ரோ... பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய முடியும். 

ஆதித்யா எல்1 என்பது இஸ்ரோவின் சூரியனைப் பற்றி அறியும் சோதனையின் ஒரு பகுதியாகும். சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும்

1 /8

ஸ்ரீஹரிகோட்டா வந்தடைந்தது ஆதித்யா எல்1. சூரியனை ஆராயத் தயாராகும் இஸ்ரோ

2 /8

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய முடியும்.

3 /8

பூமியில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை உருவாக்கி அவற்றின் நிலைமைகளை ஆராய்ச்சி செய்வது சாத்தியமற்றது என்பதால் ஆதித்யா எல்1 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

4 /8

இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்டம் சூரியனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வது மட்டுமின்றி சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்.

5 /8

சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிய இந்த ஆய்வு உதவியாக இருக்கும்  

6 /8

சில சமயங்களில் சூரியனின் சில பகுதிகளில் தீவிர அணுக்கரு இணைவு நிகழ்வுகள் ஏற்பட்டு பெருமளவில் வெடிப்பு ஏற்பட்டு சூரியப் புயலாக உருவாகிறது.

7 /8

சூரியப் புயல்கள் பூமியைத் தாக்கினால், அதன் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் பூமியின் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலம் காரணமாக, இந்த சூரிய புயல்கள் நேரடியாக பூமியை அடைய முடியாது.

8 /8

சூரியப் புயல்கள் தாக்கினால், வானத்தில் உள்ள செயற்கைக்கோள்கள், தரையில் உள்ள தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மின் கட்டமைப்புக்கள் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும். சர்வதேச விண்வெளி நிலையம் போன்றவற்றில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள், இது போன்ற சூரிய புயல்களால் நேரடியாக பாதிக்கப்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும். எனவே இஸ்ரோவின் இந்த ஆராய்ச்சி முக்கியத்துவம் பெருகிறது