Aditya L1 Mission: சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை இன்று செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சந்திராயன் திட்டங்கள் நிலவை சுற்றி அனுப்பப்பட்ட செயற்கைக்கோள். அதே போல பூமியை சுற்றியும் பல செயற்கைக்கோள் சுற்றி வருகிறது. மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சுற்றி சென்றது.
ஏழு கதிர்வீச்சு சாதனங்கள்
ஆனால் சூரியனுக்கு அனுப்பப்படும் ஆதித்யா வித்தியாசமானது. இது எந்த ஒரு கிரகத்தையும் சுற்றி அனுப்பப்படவில்லை. பூமி என்ற ஒரு கிரகம் சூரியன் என்ற ஒரு நட்சத்திரம், இரண்டு சேரும் இடத்தில் ஒரு பொசிஷன் உள்ளது. அந்த இடத்தில், பேலன்ஸ் ஆக இருக்கும். அதில் மிக முக்கியமான ஒரு இடம் எல் ஒன் ( L1). பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அந்த இடத்தில் செயற்கை கோள் அனுப்பும்போது எப்பொழுதுமே, அந்த செயற்கைக்கோள் சூரியனை பார்த்துக் கொண்டிருக்கிற போல் நிலைநிறுத்தப்படும். மற்றொரு புறம் எப்பொழுதும் பூமியை பார்த்தபடி இருக்கும்.
பூமியில் இருந்து பார்த்தால் குறிப்பிட்ட சில மணி நேரம்தான் சூரியனை பார்க்க முடியும். பூமிக்கு வளிமண்டலம் இருப்பதால், பல கதிர்வீச்சுகள் பூமிக்குள் வருவது கிடையாது. ஆனால் ஆதித்யாவில் இருக்கும் ஏழு கதிர்வீச்சு சாதனங்களை வைத்துக்கொண்டு, அனைத்து விதமான கதிர்வீச்சுகளும் இந்த செயற்கைக்கோளால் பார்க்க முடியும். காந்த புலன்கள் எந்த இடங்களில் எவ்வாறு மாறுகிறது, என்பதை பார்க்க முடியும்.
செயற்கைகோளின் பாதுகாப்பு
சூரியனை புரிந்துகொள்வதற்கு அங்கு நடக்கும் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள, சூரியன் மத்தியில் எப்படி மிக அதிகமான வெப்பம் இருக்கிறதோ, மேலே வர வர வெப்பம் குறைகிறது. அதேபோல் சில இடங்களில் திடீரென வெப்பம் அதிகமாகிறது. அது மிகப்பெரிய அறிவியல் புதிர். சூரியனின் நடைபெறுகின்ற நிகழ்வுகள், சில வெடிப்புகள் வருகின்ற பொழுது, அதனால் பூமியில் உள்ள காந்த புலன்களை நம்மை பாதுகாத்து விடுகின்றன.
ஆனால் சூரியனில் வரும் கதிர்கள் சில சமயங்களில் செயற்கைக்கோள்களுக்கும் பாதிப்பை உருவாக்குகிறது. இந்த செயற்கைக்கோள்களை நாம் பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், இதுபோன்ற விளைவுகளில் இருந்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. (L1)எல் ஒன் என்ற இடத்தில் பதினைந்து லட்சம் கிலோமீட்டர் அப்பால் வைக்கப்பட உள்ள செயற்கைக்கோள், நமக்கு அது குறித்து முன்னதாகவே ஒரு எச்சரிக்கையை கொடுக்கும். அதை வைத்து செயற்கைக்கோள்களை நம்மால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
பல தவறுகளை சுட்டிக்காட்டலாம்
இது அறிவியலுக்கும் சரி, சூரியனுக்கும் ஆய்வு குறித்து இது மிக முக்கியமான செயற்கைக்கோள். தொழில்நுட்ப ரீதியாக எப்படி நிலவின் துருவ பகுதியை வெட்டுவதற்கு சற்று கடினமாக இருந்ததோ, செவ்வாய் வட்டப்பாதை அடைய சவாலாக இருந்தது. அதற்கும் மேற்பட்ட சவாலாக இது இருக்கும்.
இது எந்த ஒரு கிரகத்தையும் சுற்றி வர போவதில்லை, இரண்டு ஈர்ப்பு விசைகளும் சேரக்கூடிய, ஒரு இடத்திற்கு நாம் அனுப்புகிறோம். ஐந்தாறு வருடங்கள் இயங்க வேண்டும் என்றால் அதையும் நாம் பாதுகாப்பாக வைத்த கொள்ள வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக இது மிகவும் சவாலான காரியமாக இருக்கும். இருந்தாலும் அறிவியல் ரீதியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகமாக உள்ளது. அறிவியல் ரீதியான பல தவறுகளை ஆதித்யா L1-ஆல் விடை கொடுக்க முடியும்.
விண்வெளி குப்பைகள்
விண்வெளியில் இருக்கும் பயன்படுத்தி முடிக்கப்பட்ட செயற்கைகோள்களை ஒன்று பூமிக்குள் தள்ளுவது , முன்னாள் சென்ற குப்பைகளை எப்படி அகற்றுவது என்பது குறித்தும் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இனிமேலும் விண்வெளியில் கழிவுகள் வராமல் இருக்க பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ