மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் (Maharashtra Assembly Elections 2019) அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் நேற்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தனர். சிவசேனா மற்றும் பாஜக (Shiv Sena - BJP) இடையே தொகுதி பகிர்வுக்குப் பிறகு, மகாராஷ்டிராவில் மூத்த சகோதரர் (அண்ணன்) இடத்தில் பாஜக இருக்கிறது என்பது தெளிவாகி உள்ளது. இந்த உண்மையை சிவசேனாவும் ஏற்றுக்கொண்டது. இந்த இருகட்சிகளுக் இடையிலான கூட்டணியில் பாஜகவை விட சிவசேனா ஒரு காலத்தில் அதிக இடங்களில் போட்டியிட்டது என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது நேரம் மாறிவிட்டது. பாஜகவின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கண்ட சிவசேனா அதிகாரத்திற்காக பாஜகவிடம் சரணடைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) செய்தியாளர்களை சந்தித்தனர். இருவரும் ஊடகங்களை நோக்கி "நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்" என்று கோஷமிட்டனர். இருவருக்கும் இடையில் எந்த வேறுபாடுகள் இல்லை. ஒன்றுபட்டு தேர்தலில் போட்டியிடுகிறோம். இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டோம் என்று கூறினார்கள்.


சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்யா தாக்கரே (Aaditya Thackeray) அறிவிக்கப்பட்டத்தில் எந்த தவறும் இல்லை, ஆனால் தற்போது கூட்டணி ஏற்பட்டுள்ளதால், ஆதித்யா சட்டப்பூர்வமாக தேர்தலில் போட்டியிடுவார் என்று உத்தவ் தாக்கரே கூறினார். மேலும் ஆதித்யாவிடம் அவரது கனவு மற்றும் வருங்காலம் குறித்து கேட்கப்படும் என்றும் கூறினார். 


மகாராஷ்டிராவில் பெரிய அண்ணன் யார்? என்ற கேள்வியை குறித்து பேசிய உத்தவ் தாக்கரே, சகோதரர்களின் உறவு நீடிக்க வேண்டும். இதுதான் எங்களுக்கு மிக முக்கியமான விஷயம் ஆகும். யார் பெரியவர்? யார் சிறியவர்? என்ற விஷயங்கள் முக்கியமில்லை என்றுக் கூறினார்.


மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 288 இடங்களில் 150 இடங்களை பாஜக போட்டியிடுகிறது. சிவசேனா 124 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 14 இடங்களில் கூட்டணி கட்சி போட்டியிடும். அதில் பெரும்பாலான வேட்பாளர்கள் பாஜகவின் தேர்தல் சின்னத்தில் போராடுகிறார்கள். தொகுதி பங்கீடு அடிப்படையில் பார்த்தால், பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. மகாராஷ்டிராவில் பாஜக ஒரு பெரிய அண்ணனாக பார்க்கப்படுகிறது.