நமது அண்டை நாடான சீனா (China), தொடர்ந்து நமக்கு பல தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டு வருகின்றது. எல்லையில் ஊடுருவ முயற்சித்துக்கொண்டிருக்கும் சீனப் படைகள், LAC-ல் செயலுத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சிகரங்களைக் கைப்பற்ற பல சதித் திட்டங்களைத் தீட்டி வருகின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கு லடாக்கில் LAC -ல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் தொடர்கிறது. இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான சில சீன நடவடிக்கைகள் உத்தராகண்ட் எல்லையில் கவனிக்கப்பட்டுள்ளன.


சீனப் பக்கத்தில் நேபாளத்தின் (Nepal) டிங்கர்-லிபு பாஸ் அருகே ஒரு குடிசை போன்ற அமைப்பு சமீபத்தில் காணப்பட்டதாக வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன. சீன எல்லைக்குள், எல்லைக்கு மிக அருகில் இருக்கும் பொது இடமான ஜோஜோ கிராமம் சம்பா மைதானத்தில் சீனா கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஜோஜோ கிராமம் நேபாளத்தின் டிங்கர்-லிபு பாஸிலிருந்து -8 கி.மீ தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பாதுகாப்பு முகவர் வட்டாரங்களின்படி, நேபாள பிரதமர் கே.பி. ஓலி (KP Sharma Oli) சீனாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினைகளை எழுப்புகிறார். இந்தோ-நேபாள எல்லையில் 200 க்கும் மேற்பட்ட புதிய எல்லை இடுகைகளை நேபாளம் அமைத்து வருகிறது. தற்போது, ​​நேபாளத்தில் 130 நிரந்தர எல்லை போஸ்டுகள் உள்ளன.


ALSO READ: சீனாவை வீழ்த்தி UN ECOSOC பெண்கள் ஆணையத்தில் உறுப்பினரானது இந்தியா!!


பூட்டான் எல்லையில் PLA துருப்புக்கள் அணிதிரட்டப்படுவதையும் உத்தராகண்ட் (Uttarakhand) எல்லைக்கு அருகே சீனாவின் புதிய கட்டுமானப் பணிகள் பற்றிய அறிக்கைகளையும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.


இதற்கிடையில், கிழக்கு லடாக்கில் (Eastern Ladakh) LAC-ல் உள்ள நிலைமை குறித்து புதன்கிழமை (செப்டம்பர் 16) மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) மாநிலங்களவையில் உரையாற்றுவார். இந்தியா-சீனா இடையிலான தற்போதைய நிலைப்பாடு குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் செவ்வாயன்று மக்களவைக்கு விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டைப் பற்றி எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்று மக்களவையில் சிங் வலியுறுத்தினார்.  மேலும் லடாக்கில் நடக்கும், நடக்கவிருக்கும் அனைத்து விதமான சதி வேலைகளையும் சமாளிக்க இந்தியாவின் ஆயுதப்படைகள் (Indian Army) தயாராக உள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.


ALSO READ: இந்தியா எதற்கும் தயாராக உள்ளது: மக்களவையில் Rajnath singh


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR